எளிய தமிழில் MySQL – பகுதி 3

752


MySQL-ஐ install செய்தல்

MySQL-ஐ install செய்யும்போது, நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பின்வருமாறு.

MySQL-ஐ install செய்வதற்கு நமக்கு அனுமதி இருக்க வேண்டும். பொதுவாக MySQL-ன் ஒரு பிரதியை நமது machine-ல் install செய்து கொள்வது நல்லது. இதை மிகவும் கடினமான விஷயமாக எண்ணி வருந்தத் தேவையில்லை. ஏனெனில் BSD, LinuX, Mac OS X, Solaris மற்றும் windows போன்ற பெரும்பாலான platform-ல் இந்த MySQL-ஆனது எளிதாக install செய்யப்படும்.



MySQL server-ஐ அணுகுவதற்கு அனைத்து  permissions-ஐயும் கொண்ட ஒரு  account இருக்க வேண்டும். பொதுவாக MySQL-ஐ முதன்முதலில் install செய்யும்போது உருவாக்கப்படும் root account இவ்வாறு அனைத்து permissions-ஐயும் கொண்டதாக அமையும்.

* பின்னர் ஒரு MySQL client தேவை. பொதுவாக MySQL command-line அல்லது MySQL query browser ஆகியவற்றைப் பயன்படுத்துவது சிறந்தது. இந்தப் பகுதியில் உள்ள அனைத்து  உதாரணங்களும் MySQL command-line-ஐக் கருத்தில் கொண்டே கொடுக்கப்பட்டுள்ளன.



1.3.1 Ubuntu Linux-ல் MySQL-ஐ install செய்தல்

சமீபத்திய உபுண்டு லினக்ஸ் நிறுவும் வழிகளை இங்கு காண்போம். இது debian மற்றும் ubuntu சார்ந்த Linux Mint distribution-களுக்கும் பொருந்தும்.



Terminal-ல் கீழ்வரும் கட்டளையைத் தரவும்.


sudo apt-get install mysql-server mysql-client

இப்போது MySQL-க்குத் தேவையான மென்பொருட்கள் அனைத்தும் repository-ல் இருந்து download ஆகி install செய்யப்படும். இப்போது MySQL-ன் root user-க்கான password கேட்கப்படும். மிகவும் சிக்கலான சொல்லையே password ஆக தர வேண்டும்.

MySQL-ன் செயல்பாடுகளை மேலும் பாதுகாக்க கீழ்வரும் கட்டளையை இயக்கவும்.


sudo mysql_secure_installation

இது பின்வரும் பணிகளைச் செய்கிறது.

1.                  Anonymous users-ஐ நீக்குதல்

2.                  localhost-ல் இருந்து மட்டுமே root-ஐ அனுமதித்தல்


3.                  test database-ஐ நீக்குதல்

மேற்கண்ட கட்டளையைக் கொடுத்த உடன், கீழ்கண்டவாறு வரிசையாக பதில்களைக் கொடுத்து Enter அடிக்கவும்.

By default, a MySQL installation has an anonymous user, allowing anyone to log into MySQL without having to have a user account created for them.  This is intended only for testing, and to make the installation go a bit smoother.  You should remove them before moving into a production environment.

Remove anonymous users? [Y/n] y

… Success!

Normally, root should only be allowed to connect from ‘localhost’.  This ensures that someone cannot guess at the root password from the network.

Disallow root login remotely? [Y/n] y

… Success!

By default, MySQL comes with a database named ‘test’ that anyone can access.  This is also intended only for testing, and should be removed before moving into a production environment.

Remove test database and access to it? [Y/n] y

– Dropping test database

… Success!

– Removing privileges on test database

… Success!

Reloading the privilege tables will ensure that all changes made so far will take effect immediately.


Reload privilege tables now? [Y/n] y

… Success!

Cleaning up…

All done!  If you’ve completed all of the above steps, your MySQL installation should now be secure.

Thanks for using MySQL!

அவ்வளவுதான் MySQL-ஐ நிறுவிவிட்டோம்.

1.3.1.1    Configuration

இப்போது MySQL-ன் பல்வேறு configuration options-ஐப் பற்றிப் பார்ப்போம்.

/etc/mysql என்ற directory-தான் MySQL-ன் config directory ஆகும்.

/etc/mysql/my.cnf 
என்ற file  ஆனது MySQL-ன் மொத்த configuration options-ஐயும் கொண்டுள்ளது.

Log file, port number, ip binding, performance என பல்வேறு options உள்ளன. இதில் சில options பற்றி இங்கே பார்ப்போம்.

port=3306 

இது MySQL server -ஆனது 3306 என்ற port-ல் இயங்குவதைக் குறிக்கிறது.

user=mysql

லினக்ஸில் mysql என்ற user உருவாகி, அதே user-ஆக server இயங்கும். இதனால் லினக்ஸ் server-ன் பாதுகாப்பு அதிகரிக்கிறது.

data dir = /var/lib/mysql

MySQL-ன் database அனைத்தும் இந்த folder-ல் சேமிக்கப்படுகின்றன. Backup செய்யும் போது, இந்த folder-ஐ கண்டிப்பாக backup செய்ய வேண்டும்.

bind-address = 127.0.0.1

எந்த ip address-ல் MySQL server இயங்க வேண்டும் என இங்கே தரலாம்.

log_error = /var/log/mysql/error.log

Configuration அல்லது connection-ல் பிழை இருந்தால் இந்த file-ல் log செய்யப்படுகிறது.

1.3.1.2  Query cache

MySQL server-ல் அடிக்கடி இயங்கும் select queries-ம், results-ம் cache-ல் சேமித்து வைக்கப்படும். இதனால், server-ன் திறனும் வேகமும் அதிகரிக்கிறது. இதற்கான options பின்வருமாறு.

query_cache_limit = 1m

query_cache_size = 16m

இங்கு m என்பது mb ஆகும். நமது RAM-ன் அளவைப் பொறுத்து இதை அதிகரிக்கலாம். உதாரணம்.

query_cache_limit = 2m

query_cache_size=32m

இந்த my.cnf file-ல் எந்த மாற்றம் செய்தாலும், MySQL server-ஐ restart செய்ய வேண்டும்.

MySQL server-ஐ restart செய்தல்

sudo service mysql restart

MySQL server-ஐ stop செய்தல்

sudo service mysql stop

MySQL server-ஐ start செய்தல்

sudo service mysql start

1.3.1.3  MySQL clients

Command line client மட்டுமின்றி GUI வழியாக, MySQL-ஐ பயன்படுத்த பல்வேறு clients உபுண்டு லினக்ஸில்  உள்ளன.

MySQL Work Bench

sudo apt-get install MySQL-workbench

MySQL Navigator

sudo apt-get install MySQL-navigator

Emma

sudo apt-get install emma

MySQL Admin

sudo apt-get install MySQL-admin

PHPMyAdmin

sudo aptitude install phpmyadmin

 

(தொடர்ந்து வரும்)