பாகிஸ்தானில் 107 பேருடன் பயணிகள் விமானம் விழுந்து நொருங்கியது : வெளியான திகில் வீடியோ!!

547

பயணிகள் விமானம்..

பாகிஸ்தானில் 99 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் பயணித்த விமானம், கராச்சியின் குடியிருப்பு பகுதியில், கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தில் அனைவரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், லாகூர் நகரில் இருந்து வர்த்தக தலைநகரான கராட்சிக்கு இயக்கப்பட்டது. இதில் 99 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்கள் இருந்தனர். ஆகமொத்தம் விமானத்தில் மொத்தம் 107 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.

கராச்சியில் விமானம் தரையிறங்க முயன்றபோது, குடியிருப்பு காலனிப்பகுதிக்குள் நொறுங்கி விழுந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து உள்ளனர்.

இந்த சம்பவத்தில், விமானத்தில் பயணித்த அத்தனை பேரும் உயிரிழந்திருக்க கூடும் என்று கருதப்படுகிறது. குடியிருப்பில் விழுந்ததால் அங்கிருந்த மக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்ட ட்வீட்டில், விமான விபத்தால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். கராச்சிக்கு புறப்பட்ட பிஐஏ தலைமை நிர்வாக அதிகாரி அர்ஷத் மாலிக் மற்றும் மீட்பு மற்றும் நிவாரண குழுக்களுடன் தொடர்பில் இருக்கிறேன்.

உடனடி விசாரணை தொடங்கப்படும். இறந்தவரின் குடும்பங்களுக்கு பிரார்த்தனைகள் மற்றும் இரங்கல்கள். இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்தார்.