இலங்கை சமூகத்தில் வ ன்மு றைகள் அதிகரிக்க சமூக வலைத்தளங்களே காரணம்!!

530

சமூக ஊடகங்கள்..

இலங்கை சமூகத்தில் வ ன்முறைகள் அதிகரிக்க பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் காரணம் என நியூயோர்க் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

அந்த பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் மனித உரிமைகள் தொடர்பான மத்திய நிலையம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.

பேஸ்புக் மற்றும் வேறு பிரபலமான சமூக வலைத்தளங்கள் தேசிய ரீதியாக ஈடுபடுத்தியுள்ள நிர்வாகிகளின் செயற்பாடுகள் போதுமானதாக இல்லை என்பதால், வ ன்முறைகளை தூண்டக் கூடிய உள்ளடக்கங்களை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திகண பிரதேசத்தில் முஸ்லிம் எதிர்ப்பை அடிப்படையாக கொண்டு ஏற்பட்ட வ ன்முறையில் மூன்று பேர் இ றந்தமை மற்றும் கடந்த ஆண்டு 259 பேர் கொ ல்லப்பட காரணமாக அமைந்த ஈஸ்டர் தாக் கு த ல் க ள் ஆகியவற்றுக்கு பின் இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பேஸ்புக் தெளிவான மற்றும் வெற்றிகரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பேஸ்புக் மூலம் பரவிய இந்த தாக் குதல் சம்பந்தமான தூ ண்டுதல்களை கட்டுப்படுத்தி இருந்தால், நிலைமையை ஆரம்பித்திலேயே கட்டுப்படுத்த முடிந்திருக்கும் என நியூயோர்க் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இலங்கை உட்பட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் அவதூறு பரப்புதல் தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்தின் தலையீடுகள் போதுமானதாக இல்லை என ஆய்வில் மேலும் தெரியவந்துள்ளது.