வவுனியாவில் கொரோனாவின் பின் சர்வமத குழுவினரின் ஒன்றுகூடல்!!

944


சர்வமத குழுவினரின் ஒன்றுகூடல்..



வவுனியாவில் சர்வமத குழுவினர் மற்றும் சமூக மட்ட அமைப்புக்கள் கலந்துகொண்ட ஒன்றுகூடல் நிகழ்வு இன்று (10.07.2020) மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.



‘மத சக வாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு’ எனும் தொனிப்பொருளில் தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட சர்வமத குழு மற்றும் சமூகமட்ட அமைப்புக்களை சேர்ந்த நாற்பது பேர் கலந்து கொண்டிருந்தன.




கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டு மூன்று மாதங்கள் கடந்தவிட்ட நிலையில் மேலும் சமூகத்தில் கொரோனா தொற்று ஏற்படாதவகையில் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடலாக அமைந்திருந்தது.


மக்களுக்கு கொரோனா தொற்று எற்படாதிருக்க நடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குசட்டம் காலப்பகுதியில் சர்வமதக் குழுவினரால், இருபது கிரமங்களில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது அத்துடன் தேசிய சமாதனப் பேரவையின் நிதி உதவியுடன் வவுனியா மாவட்டத்தில் சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் ஐக்கிய அபிவிருத்தி நிதியத்தின் நிதி பங்களிப்புடன் நான்கு நவீன கை கழுவும் இயந்திரங்கள் சுகாதாரத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதஸ்தலங்களை கண்காணிப்பதற்காக சுகாதாரத் திணைக்களத்துடன் இணைந்து கண்காணிப்பக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச சர்வமத குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் போதகர். பி.என்.சேகர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடல் நிகழ்வில் மாவட்ட மட்ட இணைப்பாளர்களான எம்.யு.எம்.உவைஸ், ஏ.மெடேசன், கெ.நிசாந்த குமார, மதத் தலைவர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.