சிகரட் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து முறையான வரி அறவீடு மேற்கொள்ளப்படவில்லை : ம துசாரம் மற்றும் போ தைப் பொருள் தகவல் நிலையம்!!

387

சிகரட் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து முறையான வரி அறவீடு மேற்கொள்ளப்படவில்லை. தெரிவு செய்யப்படும் வேட்பாளர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என ம துசாரம் மற்றும் போ தைப் பொருள் தகவல் நிலையத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் றகீம் தெரிவித்துள்ளார்.

வவுனியா தமிழ் ஊடக சங்கத்தில் இன்று (02.08.2020 இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக நாங்கள் 225 உறுப்பினர்களை தெரிவு செய்ய இருக்கின்றோம். அதற்கு வாக்காளர்கள் தயாராகி வரும் நிலையில் கிட்டத்தட்ட 7000 ஆயிரம் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளார்கள். இந்த நாட்டை முன்னேற்ற வேண்டும் என்பதே எங்கள் அனைவரதும் அபிலாசை ஆகும்.

போ தைப் பொருட்களின் பாவனையில் சிகரட் பாவனை காரணமாக ஒரு நாளைக்கு 38 கோடி செலவு செய்யப்படுகின்றது. ம துசாரத்திற்காக 59 கோடி செலவு செய்யப்படுகின்றது.

இந்த நாட்டை முன்னேற்ற வேண்டுமாக இருந்தால் இந்த சிகரட் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து அரசு முறையான வரிக் கொள்கைளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

சிகரட் பாவனை தொடர்பில் முறையான வரி அறவீடு இல்லாமையால் அரசுக்கு கிட்டத்தட்ட 100 மில்லியன் நட்டம் ஏற்படுகிறது. ஆகவே தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் முறையான வரி அறவீட்டை மேறடகொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.

சிகரட் உற்பத்தி நிறுவனம் ஒவ்வொரு நாளும் சாரரியாக 50 பேரை இலங்கையில் கொ லை செய்கின்றது. ம துசார உற்பத்தி நிறுவனங்களும் அவ்வாறு தான். கடந்த 10 வருட பாவனையுடன் ஒப்பிடுகையில் சிகரட் பாவனை மற்றும் உற்பத்தி குறைவடைந்துள்ளது.

ஆனால் சிகரட் உற்பத்தி நிறுவனத்தின் இலாபம் அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் முறையான வகையில் வரி அறவீடப்படாமையாகும்.

இந்த பொதுத் தேர்தலில் ஒரு உறுதிமொழியை இந்த வேட்பாளர்களிடம் எடுத்துள்ளோம். இந்த விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்துமாறு கோரியிருந்தோம் எனத் தெரிவித்தார்.