வவுனியாவில் பண்டாரவன்னியனின் 217வது நினைவு தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி!!

411

பண்டாரவன்னியனின் 217வது நினைவு தினம்..

பண்டாரவன்னியனின் 217வது நினைவு தினம் வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள பண்டார வன்னியனின் உருவச்சிலை முன்றலில் நாளையதினம் (25.08.2020) காலை நடைபெறவுள்ள நிலையில் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளன.

பண்டாரிவன்னியனின் நினைவுதினம் வருடாவருடம் வவுனியா நகரசபையினரினால் முன்னெடுக்கப்படும் நிலையில் இவ்வருடம் நகரசபையினரினால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

பண்டார வன்னியன் வன்னி நாட்டு இறுதி அரசரும் வன்னி நாட்டை ஆண்ட தமிழ் மன்னரும் ஆவார். இவரின் போ ர் திறமை மிகவும் வியக்கத்தக்க வகையில் இருந்தது என்பது 1782இல் லூயி என்கிற டச்சு ஆட்சியாளர் ஒருவர் எழுதிய நூல் வாயிலாகத் தெரியவருகிறது.

அதில் லூயி டச்சுக்காரர்களான நாங்கள் உலகில் எங்கெங்கெல்லாமோ போ ரிட்டோம் ஆனால் இத்தகைய மாபெரும் வீரத்தினை இந்த மாவீர மன்னனை தவிர்த்து வேறொரு அரசனிடமும் கண்டதில்லை என எழுதி இருந்தார். இவர் இலங்கையில் பிரித்தானிய காலனித்துவத்தை எ திர்த்துப் போ ராடி மடிந்தார்.