சந்தானம் வசனத்தில் இனி டபுள் மீனிங் இல்லை!!

431

Santhanam

பொதுவாகவே நகைச்சுவை வசனங்களில் இரட்டை அர்த்தம் உள்ள வார்த்தைகளை தமிழ் திரையுலகில் கவுண்டமணி செந்தில் காலத்திலிருந்தே தவிர்த்து வந்துள்ளனர்.

கேட்பவர்கள் வாயை திறக்க முடியாத அளவிற்கு வசனம் பேசி சிரிக்க வைக்கும் சந்தானம் இடை இடையே டபுள் மீனிங் வசனம் பேசுவதாக அவர் மீது புகார் எழுந்துள்ளது.

சமீபத்தில் வெளிவந்த என்றென்றும் புன்னகை படத்தில் துணை நடிகை ஒருவரிடம் டபுள் மீனிங் வசனம் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது தணிக்கைக்கு வந்த பிறகு வசனத்தை மாற்றி பேசியுள்ளார்.

சந்தானம் டபுள் மீனிங் வசனங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என பலர் கூறிவந்துள்ளனர். இதையடுத்து சந்தானத்தின் அம்மாவும் வலியுறுத்தியுள்ளார்.

இனி வரும் படங்களில் டபுள் மீனிங் வசனங்கள் பேசமாட்டேன் என சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம் சந்தானம்.