40 கிலோ எடை விண் கல் : ஒரே நாளில் பணக்காரர் ஆன விவசாயி எப்படி தெரியுமா?

1757

விவசாயி..

விண்வெளியிலிருந்து பூமிக்குள் விழும் விண்கற்களுக்கு என்று ஒரு மதிப்பு இருக்கிறது. சில நாடுகளில் விண்கற்களின் வகைக்கு ஏற்றார் போல பணம் வழங்கப்படுகிறது.

அப்படி வடகிழக்கு பிரேசிலின் தொலைதூர நகரமான சாண்டா ஃபிலோமினாவில் வசிக்கும் விவசாயிக்கு கிடைத்த அரிய வகை விண்கற்களிற்கு சுமார் 26,000 டாலர் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் பணக்காரர் ஆகிவிட்டார்.

விண்கல்லிற்கு இவ்வளவு பெரிய தொகையா என்று அனைவரும் திகைப்பில் உள்ளனர். இதுவரை பல காலகட்டத்தில், நூற்றுக்கணக்கான விண்கற்கள் வானத்திலிருந்து பூமியில் மழை போல பொழிந்துள்ளது.

சில நாடுகளில் விண்கற்களை தேடி எடுத்து விற்பனை செய்யும் வேலையை முழுநேர வேலையாகவே சிலர் செய்து வருகின்றனர். தற்பொழுது அதிக விலை கொண்ட விண்கல் பொருளாகக் குறிப்பிட்ட ஒரு விண்கல் மட்டும் கருதப்படுகிறது.

இதற்குக் காரணம் அந்த விண்கற்கள் மிகவும் அரியது என்பதால் தான், சமீபத்திய அறிக்கையின்படி, இந்த விண்வெளி பாறையின் துண்டுகள் 4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விண்கல்லின் ஒரு பகுதி மட்டும் தற்பொழுது விவசாயி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சூரிய மண்டலத்தின் தொடக்கத்திற்கு முந்தியது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அது போல நாம் பூமியில் சிறிய வைரக் கற்களை தான் தோண்டி எடுக்கிறோம். ஆனால் சில கிரகங்களும், விண் கற்களும் முழுக்க முழுக்க வைரத்தால் ஆனவை. அவற்றில் ஒன்று விழுந்தால் போதும். பில்லியனர் ஆகி விடலாம்.