தமிழ் சினிமாவின் அழகு தேவதை நடிகை ஸ்ரீவித்யா : தனிமையில் சூனியமாகி போன அவரின் கடைசிக் காலம்!!

4367


நடிகை ஸ்ரீவித்யா..



தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் நடிகை ஸ்ரீவித்யா. கர்நாடக இசைப் பாடகி எம்.எல்.வசந்தகுமாரி- கிருஷ்ண மூர்த்தியின் மகளாக கடந்த 1953ம் ஆண்டு ஸ்ரீவித்யா பிறந்தார்.



இயக்குனர் ஏ.பி.நாகராஜன் இயக்கிய திருவருள் செல்வர் என்ற படத்தில் ஸ்ரீவித்யா அறிமுகமாகினார். 1966ம் ஆண்டில் இருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவர் 2000ம் ஆண்டு வரை தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்தார்.




நடிகர் சிவாஜிகனேசன் நடித்த தீபம் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் தாமஸ் என்பவருடன் ஸ்ரீவித்யாவிற்கு நட்பு ஏற்பட்டது. காதல் தோல்வியில் இருந்த ஸ்ரீவித்யாவிற்கு ஜார்ஜ் தாமஸ் வலிய வந்து ஆறுதல் கூறி வந்தார். அது நாளடைவில் இருவருக்கும் காதலாக மாறியது.


ஶ்ரீவித்யா இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாற ஜார்ஜ் தாமஸ் வற்புறுத்தினார். ஸ்ரீவித்யா வீட்டில் உள்ளவர்களை சமாதானம் செய்து ஒரு வழியாக மதம் மாறி 1976ஆம் ஆண்டு ஜார்ஸ் தாமஸை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்தார். படப்பிடிப்பு காரணமாக வெளி இடங்களில் இருப்பதால் தனது குடும்ப செலவிற்கு தேவையான பணம், ஆகிய வங்கியில் காசோலை மூலம் கணவர் தாமஸ் பொறுப்பில் விட்டார்.


நாட்கள் செல்ல செல்ல அவர் ஸ்ரீவித்யா போல் மோசடி கையழுத்து போட்டு அவரின் பணத்தை எடுத்தார். இந்த விவரம் ஸ்ரீவித்யாவிற்கு தெரிய வர தன்னை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஜார்ஜ் தாமஸ் திருமணம் செய்து கொண்டார் என்பது அவர் புரிந்து கொண்டார்.

பின்னர் கணவர் தாமஸ் 1980ஆம் ஆண்டில் விவகாரத்து செய்தார். இருந்த போதிலும் கணவர் தாமஸ் இவர் வங்கி கணக்கில் இவரைப்போல் கையழுத்து போட்டு மீண்டும் பணத்தை எடுத்து சென்றார். பின்னர் மீண்டும் சினிமாவில் பிசியாகி முன்னணி நடிகையாக வலம் வந்தார்,

ஆனால் காலம் கொடுத்த சம்மட்டி அ டியான பு ற்றுநோயால் பாதிக்கப்பட்டார் ஸ்ரீவித்யா. அழகிய ஓவியம் அலங்கோலமாக தொடங்கியது. வடித்து வைத்த சிலை ஒன்றினை கறையான் அரிக்க துவங்கியது. அழகிய மேனியையும் அற்புத குரலையும் சின்னாபின்னபடுத்தி சீ ரழித்து சிரித்தது தலையெழுத்து, லட்சக்கணக்கான ரசிகர்களை அ ழவைத்துப் பார்த்து ரசித்தது விதி.

பெற்றவர்கள் இன்றி, உற்றார் உறவுகளின்றி, தவித்தார். எல்லாமே சூ ன்யமாகி போனது. தனிமை, ஏகாந்தம் என்ற வட்டத்துக்குள் சூழ்நிலை கைதியின் நிலைக்கு ஆளானார்.

அனைத்து சொத்துக்களையும் என்ன செய்வது? வசதியும் ஆதரவும் அற்ற கலை ஆர்வம் கொண்ட ஏழை குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்காக கோடிக்கணக்கான சொத்துக்களை உயில் எழுதி கொடுத்தார். அதனை நம்பி ஒருவரிடமும் ஒப்படைத்தார். ஆனால் அதில் எள்ளளவும் அந்த குழந்தைகளுக்கு போய்ச் சேரவில்லை.

திருவனந்தபுரத்தில் உள்ள அமிர்தா மருத்துவ ஆய்வு கழகம் மற்றும் மருத்துவனையில் தனி அறையில் தலை முடி எல்லாம் உதிர்ந்து போய் மிகவும் ப ரிதாபகரமான நிலையில் ஸ்ரீவித்யா சிகிச்சை பெற்றார்.

அந்த சமயத்தில் யாரையும் பார்க்க மறுத்த ஸ்ரீவித்யா நடிகர் கமலை மட்டும் பார்க்க அனுமதித்தார். மருத்துவமனையில் உ ணர்ச்சி வசப்பட்டு கமல் அ ழு து வெளியே வந்து உடல் நலம்பாதிக்கப்பட்டிருப்பவர்கள் நிலை குறித்து வெளியே சொல்வது அநாகரீகம் என தெரிவித்தார். பல்வேறு போ ராட்டங்க ளுக்கு பிறகு தனது 53வது வயதில் 2006ல் ஸ்ரீவித்யா கா லமானார்.