இங்கிலாந்து கால்பந்து லீக் போட்டியில் விளையாடும் முதல் இலங்கைப் பெண்!!

1298


ஜெசிந்த கலபட ஆராச்சி..



ஜெசிந்த கலபட ஆராச்சி என்ற பெண் இங்கிலாந்து பெண்கள் கால் பந்தாட்ட லீக் போட்டியில் விளையாடும் முதலாவது இலங்கை வம்சாவளியான பெண் என்ற புகழை பெற்றுக்கொண்டுள்ளார்.



19 வயதான ஜெசிந்தா இங்கிலாந்து வெஸ்ட்ஹேம் பெண்கள் கால் பந்தாட்ட அணிக்காக விளையாடுகிறார்.




அவுஸ்திரேலியாவில் பிறந்த இலங்கை வம்சாவளியான ஜெசிந்த கலபட ஆரராச்சி தனது 5 வயதில் கால்பந்தாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.


தனது சகோதரர் கால் பந்து விளையாடும் விதத்தை பார்த்த பின்னர், அதில் விளையாடும் ஆர்வம் ஜெசிந்தாவுக்கு ஏற்பட்டுள்ளது.

9வது வயதில் மென்செஸ்டரில் உள்ள கால் பந்து விளையாட்டு பயிற்சி நிலையத்தில் இணைந்து விளையாட்டில் தேர்ச்சி பெற்றுள்ளார்.


2016- 2017 ஆம் ஆண்டுகளில் 17வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய தேசிய அணிக்காகவும் 2020 ஆம் ஆண்டில் 20 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய தேசிய அணியிலும் விளையாடியுள்ளார்.

அத்துடன் மெல்பேர்னில் உள்ள பேர்த் கிளோரி மற்றும் வெஸ்ட்ஹேம் கால் பந்து அணிகளில் தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.