இரவில் உறங்கச் செல்லும் முன்னர் செய்யவே கூடாத விடயங்கள் இவைதான்!!

1796

உறங்கச் செல்லும் முன்னர்..

இரவில் படுக்கும் முன், ஒருசில செயல்களை தவறாமல் பின்பற்ற வேணடும். அப்படி செய்தால் தான் ஆழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்.

இரவில் படுக்கும் முன் ஆ ல்க ஹால் அ ருந்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஒருவேளை அப்படி ஆ ல்க ஹால் அருந்தி படுத்தால், இரவில் தன்னைத் தானே பழுது பார்த்துக் கொள்ளும் சரும செல்களின் செயல்பாட்டில் இடையூறு ஏற்படும். எனவே அழகாகத் திகழ வேண்டுமெனில் இப்பழக்கத்தைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

பகலில் தான் அலுவலகத்தில் ஏசியில் இருக்கிறீர்கள் என்றால், இரவில் கூடவா ஏசி வேண்டும். இப்படி எந்நேரமும் ஏசியிலேயே இருந்தால், சரும செல்கள் தான் அதிகமாக பாதிக்கப்படும்.

அதுமட்டுமின்றி, எப்போதும் ஏசியில் இருப்போருக்கு சருமத்தில் உள்ள எண்ணெய் பசை முற்றிலும் வெளியேற்றப்பட்டு, சரும வறட்சி அதிகரித்து, சருமமானது முதுமைத் தோற்றத்தைப் பெறக்கூடும்.

எந்நேரமும் மொபைலைப் பார்த்தவாறு இருந்தால், அதனால் கண்கள் பொலிவிழந்து, கருவளையங்களுடன் தான் காணப்படும். போனின் திரையில் பாக்டீரியாக்கள் அதிகம் இருப்பதால், அதனை முகத்தின் அருகே வைக்கும் போது, பருக்கள் அதிகம் வரும்.

இவ்வளவு பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமெனில், நள்ளிரவு சாட்டிங்கை முதலில் நிறுத்துங்கள். அழகாக இருக்க வேண்டுமென்று விரும்பினால், வாரம் ஒருமுறையாவது தலையணை உறையை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், அதில் சேர்ந்துள்ள அழுக்குகளின் மூலமே முகத்தில் பருக்கள் மற்றும் தலையில் பொடுகு வர ஆரம்பித்துவிடும்.