வவுனியாவில் மாபெரும் இந்து எழுச்சி ஊர்வலம் : அணி திரண்ட மக்கள்!!

3016

இந்து எழுச்சி ஊர்வலம்..

இந்துக்கள் எதிர்நோக்குகின்ற முக்கிய பிரச்சினைகளை உள்ளடக்கிய ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து வவுனியா மாவட்ட இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி இடம்பெற்றது.

குறித்த பேரணி இன்று (01.10.2020) காலை 8.30 மணியளவில் குருமன்காடு காளிகோவில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி காலை 11.40 மணியளவில் வவுனியா கந்தசுவாமி கோவில் முன்றலில் முடிவடைந்தது.

வவுனியா மாவட்டம் மட்டுமல்லாது உலகெங்கும் வாழ்கின்ற இந்துக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை ஒழுங்குப்படுத்தி வரிசைப்படுத்தி வவுனியாவில் இருக்கின்ற இந்த அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து இந்த பேரணியை முன்னெடுத்திருந்தனர்.

காலை 08.00 மணியளவில் வவுனியா குருமன்காடு காளிகோவில் முன்றலில் இருந்து ஆரம்பமாகிய பேரணியானது குருமன்காட்டு சந்தி ஊடாக சென்று அங்கிருந்து புகையிரத நிலைய வீதியின் ஊடாக நகர மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரம் சென்று அங்கிருந்து பஜார் வீதியூடாக சென்று ஹொரவப்பொத்தானை வீதியூடாக அங்கிருந்து வவுனியா கந்தசுவாமி கோவில் முன்றலை சென்றடைந்து ஊர்வலம் நிறைவுற்றது.

இந்து சமயத்தின் கலை, கலாச்சாரங்கள், தமிழர்களின் பண்பாடுகளை உள்ளடக்கிய பல்வேறு அம்சங்கள் பேரணியில் உள்ளடங்கியிருந்தன.

குறித்த மாபெரும் ஊர்வலத்தில் இந்து சமய தலைவர்கள், குருக்கள், சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள் என இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்துக்கள் எதிர்நோக்குகின்ற முக்கிய பிரச்சினைகளை உள்ளடக்கிய ஆறு அம்ச கோரிக்கைகயானது,

எமது கோரிக்கைகளாக பசு வதையை எவ்வடிவிலும் தடுத்தல் அதனை அரசாங்கத்திற்கு சட்டமாக்க கோருதல், மத மாற்றத்தை தடுத்தல் அதனை தடுக்க அரசாங்கத்தை சட்டமாக்க கோருதல்.

இந்து மதம் சார்ந்த புராதன இடங்கள் எல்லாவற்றிலும் இந்து மதம் சார்ந்தவர்கள் எந்தவித தடையும் இன்றி வணக்கம் செய்வதற்கும், வழிபாடு செய்வதற்கும் ஆவண செய்தல்

ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிக் கல்விக்கு முக்கியம் கொடுத்து மற்றைய வகுப்புக்கள் நிகழ்வுகளை தடை செய்து அறநெறியை வளர்த்தல்,

வவுனியா மாவட்டத்திலே பல வீதிகளிற்கு கிராமங்களிற்கு இந்து மதம் சார்ந்த பெயர்கள் மாற்றப்படுகின்றமை போன்ற கோரிக்கைகளாகும்.