பொது மக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு : மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை!!

1072


அவசர அறிவிப்பு..



கொரோனா வைரஸிற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்கு செல்லுமாறு நாட்டு மக்களிடம் அரசாங்கம் கேட்டுள்ளது.



சுவாச பிரச்சினை அல்லது கொரோனா தொற்றுக்கு சமமான சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.




திவுலபிட்டிய பிரதேசத்தில் கொரோனா தொற்றுடன் பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டமை தொடர்பில் கொரோனா சமூகத்திற்குள் பரவுவதனை தடுப்பதற்காக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு பின்னரே சமூகத்திற்குள் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


அடுத்ததாக இந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மேற்கொண்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் சுமார் 600 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் கண்டுள்ள நிலையில், இந்த அவசர அறிவிப்பினை அரசாங்கம் சற்று முன்னர் விடுத்துள்ளது.


கொரோனா வைரஸ் பரவலுக்கான அறிகுறிகள் இருந்து அருகிலுள்ள அரச வைத்தியசாலைகளுக்கு செல்லாதவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது.