சீன கடல் எல்லையில் ரோந்து சென்ற அமெரிக்கா : போ ருக்கு தயாராகுமாறு சீன அதிபர் அதிரடி உத்தரவு!!

636

சீன அதிபர் அதிரடி..

இந்திய-சீன எல்லையில் கடந்த சில மாதங்களாக ப தற்றம் தொடர்ந்து வரக்கூடிய நிலையில் சீன இராணுவ வீரர்களை போ ருக்கு தயாராக இருக்கும்படி அந்நாட்டு அதிபர் ஜிங்பிங் கேட்டுக்கொண்டுள்ளதாக சின்ஹுவா செய்தி ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.

சாவ்ஜோ நகரில் சீன மக்கள் இராணுவ படையின் வீரர்களை சந்தித்தபோது, “வீரர்கள், முற்றிலும் விசுவாசமாகவும், தூய்மையானவர்களாகவும், நம்பகமானவர்களாகவும் இருக்க வேண்டும்” என ஜிங் கூறியுள்ளார்.

சீன அதிபரின் இந்த கருத்தானது இந்தியாவை குறித்து அல்ல என அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாறாக சமீபத்தில் தைவான் ஜலசந்தியில் அமெரிக்க போ ர் கப்பல் ஒன்று ரோந்து மேற்கொண்டிருந்த நிலையில் அது குறித்துத்தான் கருத்து தெரிவித்திருப்பார் என சொல்லப்படுகின்றது.

தென் சீனக் கடலில் வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ், புருனே மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் பெய்ஜிங் இறையாண்மையைக் கோருகிறது.

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், இந்தோ-பசிபிக் பகுதியில் அமெரிக்கா தனது செல்வாக்கை நிலைநிறுத்திக்கொள்ள மீண்டும் மீண்டும் அ த்துமீறலில் ஈடுபட்டு வருகின்றது.

முன்னதாக கொரோனா வைரஸ் சீனாவிலிருந்துதான் பரப்பப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தது பெரும் அ திர்வலைகளை உருவாக்கியிருந்தது.

அதைத்தொடர்ந்து, இந்தோ-பசிபிக் ஜனநாயக நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ சந்தித்திருந்து குறிப்பிடத்தக்கதாகும்.