ராகுல் காந்திக்கு மசாலா தோசை பிடிக்கும் : நடிகை ரம்யா!!

425

Rahul at a rally

தமிழ், கன்னட படங்களில் கதாநாயகியாக நடித்த ரம்யா காங்கிரசில் இணைந்து எம்.பி.யாகியுள்ளார். கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். கர்நாடக காங்கிரசில் இளம் தலைவராக வலம் வருகிறார். சமீபத்தில் ராகுல் காந்தி சுற்றுப் பயணமாக ரம்யா தொகுதிக்கு வந்தார். இது தனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்றார் ரம்யா. அவர் கூறியதாவது..

ராகுல் காந்தி எனது மாண்டியா தொகுதிக்கு வந்தது பெரிய விஷயம். நாங்கள் காரில் இடது புறம் சென்று கொண்டிருந்தோம். அப்போது வலது புறத்திலும் போக்குவரத்தை நிறுத்தி இருந்தனர். வலது புறம் வாகனங்களை ஏன் நிறுத்து கிறார்கள் என்று சொல்லி ராகுல் வருத்தப்பட்டார். அவர் நடவடிக்கை என்னை மிகவும் கவர்ந்துள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி மாண்டியா தொகுதியில் போட்டியிட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் அவர் மாண்டியாவில் நிற்பார் என்பதெல்லாம் வதந்திதான். அமேதி தொகுதிக்கு ராகுல் நிறைய நன்மைகள் செய்துள்ளார். ராகுல் காந்திக்கு மசாலா தோசை மிகவும் பிடிக்கும். அதை விரும்பி சாப்பிடுவார். குடகுமலையும் அவருக்கு பிடிக்கும் என்று இவ்வாறு ரம்யா கூறினார்.