ஐஸ்வர்யா ராயால் கொந்தளித்த பி.வாசு!!

442

Aishwarya

சந்திரமுகி படத்திற்கு பிறகு பல வருடங்களை அடுத்து இயக்குனர் பி.வாசு ஐஸ்வர்யாராய்யை மனதில் கொண்டு ஒரு கதை எழுதியுள்ளார்.

கதையை பற்றி ஐஸ்வர்யாவிடம் சொல்ல அவருக்கு கதை பிடித்து போக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். இப்படத்திற்கு ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்கவும் பெயர் வைத்துள்ளனர்.
பின் இதை மறுத்து ஐஸ்வர்யா கருத்து தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியானதையடுத்து பி.வாசு தனக்கு ஐஸ்வர்யாராய் பெயரை வைத்து தான் பெயர் சம்பாதிக்க வேண்டும் என அவசியம் இல்லை நான் ரஜினியை வைத்து படம் எடுத்தவன் என்று கூறியுள்ளார்.

பின் இப்படபிடிப்பிற்கு போக 8 மாதங்கள் உள்ள நிலையில் ஏன் கதையைப்பற்றி பத்திரிக்கையாளர்களுக்கு செய்தி கொடுக்க வேண்டும் என்றுதான் ஐஸ்வர்யா எண்ணியுள்ளார்.
அனிமேஷன் திரைப்படம் என்பதால் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு கதாநாயகி பற்றி கண்டிப்பாக கூறி தான் ஆக வேண்டும் என்று ஐஸ்வர்யாவுக்கு பதில் கூறிவிட்டதாகவும் கண்டிப்பாக இப்படத்தில் ஐஸ்வர்யா நடிக்க உள்ளார் எனவும் தற்போது மணிரத்னம் படம் முதலில் நடிப்பதா என் படம் முதலில் நடிப்பதா என்ற குழப்பத்தில் தான் ஐஸ்வர்யா உள்ளார்.

மேலும் ஐஸ்வர்யாவுடன் காக்காக்களும் நடிக்க உள்ளதால் காக்காகளுக்கு பயிற்சி அளிக்க பிரான்ஸிலிருந்து பயிற்சியாளர்களை வரவழைக்கவுள்ளதாகவும் எப்படியும் காக்காக்களுக்கு பயிற்சியளிக்க இரண்டு மூன்று மாதங்கள் ஆகும் எனவும், மேலும் ஐஸ்வர்யா இந்த படத்தில் நடிப்பது முழுக்க முழுக்க உண்மை என பி.வாசு தெரிவித்துள்ளார்.