18 கோடி சம்பளம் வாங்கும் முருகதாஸ்!!

526

Director AR Murugadoss Stillsஏ.ஆர் முருகதாஸ் – விஜய் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

துப்பாக்கி படத்துக்குப் பிறகு மீண்டும் இணைந்த கூட்டணி என்பதாலும், விஜய்க்கு இது 57வது படம் என்பதாலும் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் படத்தை lyca புரொடக்ஷன் தயாரிக்கிறது. ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்கிறார். அனல் அரசு சண்டைப் பயிற்சியைக் கவனிக்கிறார். லால்குடி என். இளையராஜா கலை இயக்கத்தில் ஈடுபடுகிறார்.

பெரிய அளவிலான டெக்னிக்கல் டீமுடம் முருகதாஸ் களம் இறங்கி இருப்பதால், படத்தின் பட்ஜெட் 100கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் நடிக்க விஜய்க்கு 22கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் 18 கோடி சம்பளம் வாங்குகிறாராம்.