அஜித் படத்தில் இருந்து அனுஷ்கா அதிரடியாக நீக்கம்!!

480

Anuskaவீரம் படத்தின் வெற்றியை அடுத்து அஜித், கெளதம் மேனனின் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். கௌதம் இயக்கத்தில் அஜித் நடிக்கும் முதல் படம் இதுவாகும். நிதிப் பிரச்சினைகளில் திண்டாடும் கெளதம் மேனனுக்கு உதவும் விதமாகவே அஜித் தானே முன்வந்து இந்தப் படத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்தப் படம் வெகு நேர்த்தியாகவும், நவீன உத்திகளுடனும் தயாரிக்கப்பட இருப்பதால் ஒப்பனைக் கலைஞர்களிலிருந்து நடனக் கலைஞர்கள் வரை ஹொலிவுட்டிலிருந்து வரவழைக்கப்பட உள்ளனர். அஜித்தும் சமீபத்திய கருப்பு, வெள்ளை தலைமுடியுடன் கூடிய தோற்றத்தை மாற்றி இந்தப் படத்தில் இளமையாகக் காட்சியளிக்க உள்ளார். இதற்காக தினமும் ஜிம்மில் பல மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறார்.

இதில் அஜித் ஜோடியாக நடிக்க அனுஷ்காவை முதலில் தேர்வு செய்தனர். தற்போது அவரை நீக்கிவிட்டு மும்பையில் இருந்து புது நாயகியை தேடுகிறார்கள். அனுஷ்கா எடை போட்டதால் மாற்றி விட்டார்களாம்.

அஜித்தின் படங்களில் இதுவே மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட உள்ளதாகத் தெரிகின்றது.