சுஜிபாலா நாயகியாக நடிக்கும் உண்மை படத்தை இயக்குபவர் பி.ரவி குமார். இவரே இதில் முக்கிய கரக்டரில் நடிக்கவும் செய்கிறார். இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்க உள்ளது. இதற்காக ரவிகுமார் லோகேஷன் பார்க்க சென்று இருந்தார்.
மும்பை அந்தேரியில் காரில் செல்ல முடியாத இடங்களுக்கு நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். வேர் சோவா பகுதியில் சிக்னலை கடந்த போது பின்னால் வந்த லொறி மோட்டார் சைக்கிளில் மீது பயங்கரமாக மோதியது.
இதில் ரவிகுமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அந்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ரவிகுமாரின் விலா எலும்பிலும் கையிலும் பலத்த அடிபட்டு உள்ளது. வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.





