இலங்கையில் தற்போது பரவும் கொரோனா அலையை கட்டுப்படுத்த ஒரு மீற்றர் சமூக இடைவெளி போதாது!!

600


சமூக இடைவெளி..



இலங்கையில் தற்போது பரவி வரும் கொரோனா அலையை பொறுத்த வரை ஒரு மீற்றருக்கும் அதிகமான சமூக இடைவெளியை பேண வேண்டிய அவசியம் உண்டாகியுள்ளதாக வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.



கொவிட் – 19 வைரஸ் தொற்றின் தற்போதைய அலையின் பரவல் நிலையை அவதானித்ததன் மூலமே குறித்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,




மக்கள் அதிகம் கூடுமிடங்களில் நிபுணர்களின் ஆலோசனைக்கமைய குறைந்தபட்சம் ஒன்றரை முதல் இரண்டு மீற்றர் சமூக இடைவெளி தூரத்தை பேணுவது சிறந்தது.


மனித சமூகத்தின் செயற்பாடுகள் தான் கொவிட் – 19 வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதை தீர்மானிக்கிறது. இந்த நோய் பரவாமல் தடுக்கும் முக்கிய பணி உங்களுக்கும் எனக்கும் நாட்டிலுள்ல அனைவருக்குமுள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.