நம்பிக்கையை காப்பாற்றத் துடிக்கும் அமலாபால்!!

463

Amala Paul

மைனாவுக்குப் பிறகு பேசப்படும் நடிகையானவர் அமலாபால். அதையடுத்து விக்ரம், விஜய் என்று முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து வருபவர், தற்போது தனுஷூடன் வேலையில்லா பட்டதாரி மற்றும் வெற்றிமாறன் இயக்கும் படத்திலும் நடிப்பவர், சமுத்திரகனி இயக்கும் நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்துள்ளார்.

இதில் நிமிர்ந்து நில் படத்தில் அமலாபாலின் நடிப்பைப்பார்த்த சமுத்திரகனி, அடுத்து தான் கதை வசனம் எழுதும் ஒரு திகில் படத்திற்கும் அவரையே நாயகியாக்கியுள்ளாராம். புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் இப்படத்தில் அமலாபால்தான் பிரதான வேடத்தில் நடிக்கிறாராம்.

கஹானி ரீமேக்கான நீ எங்கே என் அன்பே படத்தில் நயன்தாரா எப்படி கதைக்கு முதுகெழும்பான வேடத்தில் நடிக்கிறாரோ, அதேபோல் இதில் அமலாபால்தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அதனால் இதுவரை ஹீரோக்களின் கையை பிடித்தே சென்ற நான், இந்த படத்தில் தனியாக நின்று மொத்தக் கதையையும் என் தோளில் சுமக்கப்போகிறேன். அதனால் இனி டம்மியான கதாநாயகி வேடங்களுக்கும் குட்பை சொல்லப்போகிறேன் என்று தில்லாக கூறும் அமலாபால், இந்த நேரத்தில் சமுத்திரகனியை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறாராம.

நிமிர்ந்துநில் படத்தில் என்னை சவாலான காட்சிகளில் நடிக்க வைத்த அவர், அப்படத்தில் நான் நடித்துக்கொண்டிருக்கும்போதே, என்னை மனதில் கொண்டு இந்த கதையை எழுதியிருக்கிறார். அந்த அளவுக்கு எனது நடிப்பு அவரை பாதித்திருக்கிறது.

அதனால் என்னை நம்பி இந்த வாய்ப்பு அவர் கொடுத்திருப்பதால், இதுவரை நடிக்காத அளவுக்கு நடிப்பில் பெரிய அளவில் ஸ்கோர் பண்ணி சமுத்திரகனி என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றப்போகிறேன் என்கிறார் அமலாபால்.