பெண்களின் முதுகில் நடந்து சென்று குழந்தை வரம் கொடுக்கும் சாமியார்களின் : அ திர்ச்சி வீடியோ!!

2498

சத்தீஸ்கர் மாநிலத்தின்ல்..

சத்தீஸ்கர் மாநிலத்தின் தம்தாரி மாவட்டத்தில் உள்ள ‘அங்கர்மேட்டி தேவி’ கோவிலில் ஆண்டு தோறும் தீபாவளிக்கு அடுத்து வரும் முதல் வெள்ளிக்கிழமையில் வினோத திருவிழா ஒன்று நடைபெற்று வருகிறது.

அந்த திருவிழாவில் குழந்தை வரம் வேண்டியிருக்கும் பெண்கள் வரிசையாக தரையில் படுத்திருப்பர். அப்போது அங்கிருக்கும் சாமியார்கள் கையில் கொடிகளை ஏந்தியவாறு மந்திரங்களை ஓதியபடி பெண்களின் முதுகில் வேகமாக நடந்து செல்வர்.

இவ்வாறு முதுகில் நடந்து சென்று சாமியார்கள் ஆசீர்வாதம் வழங்கினால் குழந்தை பிறக்கும் என்பது அக்கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

இது குறித்து கருத்து கூறிய அம்மாநில ஆணையத்தின் தலைவர் (Chairperson of Chhattisgarh State Commission) கிரண்மய் நாயக், இது போன்ற சடங்குகளுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன். இந்த நடைமுறை தீங்கு விளைவிக்கும்.பெண்களின் முதுகில் ஏறிச் செல்வது சரியானதல்ல.

இது போன்ற சடங்குகளின் அபாயங்கள் குறித்து கிராம மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக கிராமத்திற்கு வருவேன் என அவர் கூறியுள்ளார். இந்த வினோத வழிபாடு குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.