வவுனியாவில் புதுவருடத்தை வரவேற்று கிறிஸ்தவ ஆலயங்களில் சுகாதார வழிமுறைகளுடன் விசேட வழிபாடுகள்!!

1710

விசேட வழிபாடுகள்..

வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அமைதியான முறையில் புதுவருடத்தை வரவேற்று சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

அந்தவகையில் வவுனியாவின் பிரதான கிறிஸ்தவ தேவாலயமான இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆலய பங்குதந்தை அருட்பணி ஜெயபாலன் தலைமையில் காலை விசேட திருப்பலி பூஜைகள் இடம்பெற்று, திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு புதுவருடத்தை வரவேற்று சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த மக்கள் புதுவருட வாழ்த்துக்களைப் பரிமாறி கொண்டதுடன், இவ் வருடம் சிறப்பாக அமைய வேண்டி வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான மக்களுடன் குறித்த வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன. தேவாலயத்தின் பாதுகாப்பு கடமையில் இராணுவத்தினரும், பொலிசாரும் ஈடுபட்டிருந்தனர்.

இதேபோன்று வவுனியாவில் அமைந்துள்ள ஏனைய கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு ஆராதனைகள் நிறுத்தப்பட்டு புதுவருடத்தை வரவேற்று அமைதியான முறையில் காலையில் சிறப்பாக வழிபாடுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.