வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ 2ம் நாள்!!(படங்கள், காணொளி)

485

வவுனியா கோவில்குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் இரண்டாம் நாளான நேற்று (04-03 -2014) காலை முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ரகுநாத கமலேஸ்வர குருக்கள் தலைமையில் அபிசேகங்கள் நடை பெற்று மதியம் எம் பெருமான் திரு வீதியில் இடப வாகனத்தில் எழுந்தருளிய திருக்காட்சி இடம்பெற்றது.

பகல் திருவிழா நிறைவு பெற மீண்டும் மாலையில் நான்கு மணி முதல் அபிசேகங்கள் ஆரம்பமாகி வசந்தமண்டப பூஜையின் பின் மாலை ஏழு மணியளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் காமதேனு வாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் திருவீதி உலா வந்த காட்சி இடம்பெற்று இரண்டாம் நாள் திருவிழா இனிதே நிறைவு பெற்றது.

-கஜேந்திரன்-

13 14 15 16 17 18 19 20