இலங்கையிலும் மரபணு மாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!!

1638


புதிய கொரோனா வைரஸ்..



பிரித்தானியாவில் மரபணு மாறிய புதிய கொரோனா வைரஸ் இலங்கையில் உள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. புதிய வகை வைரஸ் தொற்றுக்கு இலக்காக நபர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவை இயக்குனர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.



பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவருக்கே இந்த தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மரபணு மாறிய வைரஸ் தான் அவருக்கு தொற்றியுள்ளது என்பதை தொடர்பில் ஆராய்வதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.




குறித்த நபரில் உடலில் புதிய கொரோனா வைரஸ் நுழைந்திருக்கலாம் என சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. மரபணு மாறிய VUI-202012/0 என்ற புதிய வகை வைரஸினால் உயிராபத்துக்கள் இல்லாத போதும், முன்னரை விட 50 மடங்கு அதிகமாக பரவும் வல்லமை கொண்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.