பக்தர்களை வரவேற்று ஆசி வழங்கும் நாய் : இந்தியாவில் வினோதம்!!

1172


வினோதம்..



மகாராஷ்டிராவில் கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்களை, நாய் ஒன்று கைகொடுத்து ஆசிர்வாதம் வழங்கிவரும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.



இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில், அகமத்நகர் மாவட்டத்தில் சித்தி விநாயகர் கோயில் உள்ளது. இங்கு ஒரு நாய் ஒவ்வொரு நாளும் கோவிலின் வாசலில் அமர்ந்துகொண்டு, அங்கு வரும் பக்தர்களை கை கொடுத்து வரவேற்கிறது.




அதேபோல், அதன் முன் தலைவணங்கும் பக்தர்களுக்கு தனது பாதங்களால் ஆசியும் வழங்குகிறது. அங்கு வரும் பக்தர்களும் அந்த நாயை கொஞ்சி தடவிக்கொடுத்துவிட்டு செல்கின்றனர்.


இதனை இணையவாசி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். மிகவும் வைரலான இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் நாயின் தன்மையான, அன்பான நடத்தையை கண்டு நெகிழ்ச்சியடைகின்றனர்.

இது போன்று கோயில்களில் விலங்குகளில் தரிசனம் என்பது இந்தியாவில் பரவலாக காணப்படுகிறது. விலங்குகளுக்கு எதிரான மனிதர்களின் வ ன்முறை சம்பவங்கள் அதிகரித்துவரும் இக்காலக்கட்டத்தில், இதுபோன்ற சமூக வலைதள பதிவுகள் மனிதர்களிடையே விலங்குகளின் மீதான கரிசனத்தை அதிகரிக்கச் செய்கிறது.


பொதுவாகவே இந்தியாவில் ஆமை, முதலை, குரங்கு, பல்லி, புலி, சிங்கம், கழுகு, பாம்பு என பல விலங்குகளை கடவுளாக வணங்குவது வழக்கத்தில் இருக்கிறது.

குறிப்பாக இந்து மத மக்களிடையே இது போன்ற விலங்குகள் வழிபாடு தொன்றுதொட்டு காணப்படுகிறது. இந்து மக்கள் நாயை ‘பைரவர்’ எனம் கடவுளாக வணங்குவைத்து குறிப்பிடத்தக்கது.