வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் 4771 வறிய குடும்பங்கள் : பிரதேச செயலாளர்!!

1409

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் பதிவில் உள்ள 35875 குடும்பங்களில் 4771 வறிய குடும்பங்களாக காணப்படுவதாக வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தெரிவித்தார்.

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 42 கிராம சேவையாளர் பிரிவில் 35875 குடும்பங்கள் பதிவில் உள்ளதுடன் இவர்களில் பெண் தலமைத்துவ குடும்பம், விசேட தேவையுடையோர், விதவைகள் என 4771 குடும்பத்தினர் வறிய குடும்பத்தினர் பட்டியலில் உள்ளதாகவும்,

அதி கூடிய குடும்பங்கள் வசிக்கும் கிராம சேவையாளர் பிரிவுகளாக தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவு – 2478 , மகாறம்பைக்குளம் கிராம சேவையாளர் பிரிவு – 2347, ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவு – 2125,

பண்டாரிக்குளம் கிராம சேவையாளர் பிரிவு – 1693 , ஈச்சங்குளம் கிராம சேவையாளர் பிரிவு – 1460 , பட்டானிச்சிபுளியங்குளம் கிராம சேவையாளர் பிரிவு – 1458 , காத்தார் சின்னகுளம் கிராம சேவையாளர் பிரிவு – 1422 , நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவு – 1427 என்ற அடிப்படையில் பதிவில் காணப்படுவதுடன்,

அதி கூடிய பெண் தலைமைத்துவ குடும்பம், விசேட தேவையுடையோர், விதவைகள் பட்டியலில் அதிகூடியளவில் காணப்படும் கிராம சேவையாளர் பிரிவுகளாக தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவு – 430, மகாறம்பைக்குளம் கிராம சேவையாளர் பிரிவு – 386,

நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவு – 325, பண்டாரிக்குளம் கிராம சேவையாளர் பிரிவு – 301, கூமாங்குளம் கிராம சேவையாளர் பிரிவு – 205, ஆசிக்குளம் கிராம சேவையாளர் பிரிவு – 199 என்ற அடிப்படையில் செல்கின்றது எனவும்,

குறித்த கணக்கெடுப்புக்கள் 2019.12.31ம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதன் பின்னர் இதுவரையிலான புதிய கணக்கெடுப்புக்கள் பதிவில் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.