நேற்று முதல் தடவையாக 67 கொரோனா மரணங்கள் : மலையென உயரும் எண்ணிக்கை!!

760


கொரோனா மரணங்கள்…



இலங்கையில் நாளொன்றில் அறிவிக்கப்பட்ட அதிவுயர் மரணங்களின் எண்ணிக்கை நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, இறுதியாக 67 கொவிட் மரணங்கள் தொடர்பான அறிவிப்பை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.



இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1910ஆக அதிகரித்துள்ளது. கடந்த மே 17ம் திகதி முதல் ஜுன் மாதம் 8ம் திகதி வரை இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.




உயிரிழந்தவர்களில் 43 ஆண்களும், 24 பெண்களும் அடங்குகின்றனர். அத்துடன், 56 பேர் வைத்தியசாலைகளின் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


அதேவேளை, 6 உயிரிழப்புக்கள் வீடுகளிலும், எஞ்சிய 5 உயிரிழப்புக்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்திலும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை 20 வயதுக்கு குறைவான ஒரு கொவிட் உயிரிழப்பும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 50 வயதுக்கு குறைவான 07 பேர் உயிரிழந்தோர் பட்டியலில் அடங்குகின்றனர்.


50 முதல் 69 வயதுக்கு இடைப்பட்ட 21 பேர் உயிரிழந்துள்ளனர். 70 முதல் 79 வயது வரையான 19 பேரும், 80 முதல் 89 வயது வரையான 18 பேரும் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிடுகின்றது. 90 வயதுக்கு மேற்பட்ட இரு மரணங்களும் இந்த பட்டியலில் அடங்குகின்றன.