வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 15 பேர் உட்பட 35 பேருக்கு கொரோனா தொற்று!!

2169


கொரோனா..



வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 15 பேர் உட்பட 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று இரவு (14.06) வெளியாகின.




அதில் தோணிக்கல் பகுதியில் ஐந்து பேருக்கும், கற்பகபுரம் பகுதியில் நான்கு பேருக்கும், பட்டானிச்சூர் பகுதியில் ஒருவருக்கும், சிறிராமபுரம் பகுதியில் ஒருவருக்கும், சமயபுரம் பகுதியில் ஒருவருக்கும்,


ஈஸ்வரிபுரம் பகுதியில் ஒருவருக்கும், மதியாமடு பகுதியில் ஒருவருக்கும், பெரிய உளுக்குளம் பகுதியில் இருவருக்கும், உளுக்குளம் பகுதியில் மூவருக்கும், கற்குழி பகுதியில் இருவருக்கும், வேப்பங்குளம் பகுதியில் இருவருக்கும், பனிக்கர் புளியங்குளம் பகுதியில் ஒருவருக்கும்,

நெளுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், பூந்தோட்டம் பகுதியில் ஒருவருக்கும், நீலியாமோட்டை பகுதியில் ஒருவருக்கும், சுந்தரபுரம் பகுதியில் ஒருவருக்கும், போகஸ்வேவ பகுதியில் ஒருவருக்கும்,


கற்குளம் பகுதியில் ஒருவருக்கும், கனகராயன்குளம் பகுதியில் ஒருவருக்கும், மடுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், மடு வீதியில் இருவருக்கும், தனிமைப்படுத்தப்பட்டிருந்த தொற்று இனங்காணப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுடன் தொடர்பை பேணிய குடும்பநல உத்தியோகத்தரான பூவரசன்குளம் பகுதியில் ஒருவருக்கும் என 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், வேப்பங்குளம், பனிக்கர் புளியங்குளம், நெளுக்குளம், பூந்தோட்டம், நீலியாமோட்டை, சுந்தரபுரம், போகஸ்வேவ, கற்குளம், கனகராயன்குளம், மடுக்குளம், மடு வீதி, கற்குழி ஆகிய பகுதியில் இனங்காணப்பட்ட 15 தொற்றாளர்களும் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்களாவர்.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.