வவுனியா சகாயமாதாபுரம் கிராமம் ஒரு மாதத்தின் பின்னர் முற்றாக விடுவிப்பு!!

1106

சகாயமாதாபுரம்..

கோவிட் பரவல் தீவிரமடைந்ததையடுத்து முடக்கப்பட்டிருந்த வவுனியா சகாயமாதாபுரம் கிராமத்தின் ஒர் பகுதியும் இன்று (06.07.2021) மதியம் முற்றாக விடுவிக்கப்பட்டது.

வவுனியா சகாயமாதாபுரம் கிராமத்தில் அதிக கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் குறித்த கிராமத்தில் இருந்து வெளியேறவும் கிராமத்திற்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டு இராணுவம் மற்றும் பொலிசாரின் பாதுகாப்பின் கீழ் கடந்த மாதம் (05.06.2021) ஆம் திகதி கொண்டு வரப்பட்டு முடக்கப்பட்டிருந்தது.

குறித்த கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில் கோவிட் பரவலை தடுக்கும் முகமாக பயணத்தடை விதிக்கப்பட்டு முழுமையாக முடக்கப்பட்டிருந்த குறித்த கிராமத்தின் அச்சநிலை குறைவடைந்த பின்னர் 22 நாட்களின் பின் குறித்த கிராமத்தின் சில பகுதிகள் கடந்த (25.06.2021) விடுவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அக்கிராமத்தில் மேலும் சில பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் கிராமத்தின் குறித்த பகுதி மாத்திரம் தொடர்ந்து முடக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றையதினம் (06.07.2021) வைத்தியர் பிரசன்னா தலமையில் சென்ற சுகாதார பிரிவினர் அக்கிராமத்தில் 30க்கு மேற்ட்டவர்களுக்கு அன்ரிஜன் பரிசோதனை மேற்கொண்டதுடன் அவர்களின் பெறுபேற்றில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தியதன் பின்னர் கிராமத்தில் முடக்கப்பட்ட ஒர் பகுதியும் விடுவிக்கப்பட்டது.

சகாயமாதாபுரம் கிராம் ஒரு மாதத்திற்கு பின்னர் முற்றாக விடுவிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பியுள்ளது.