பூமியை நோக்கி வரும் இராட்சத விண்கல்!!

1071


இராட்சத விண்கல்..



பூமியை நோக்கி இராட்சத விண்கல் ஒன்று வந்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல் எதிர்வரும் 24ம் திகதி பூமியை அண்மித்து செல்லும் என தெரிவிக்கப்படுகின்றது.



2008 GO20 என்னும் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த விண்கல் ஒரு விளையாட்டு மைதானம் அளவிற்கு பெரிதாக இருக்கின்றது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.




இதனால் பூமிக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அது பூமியில் இருந்து 59 லட்சத்து 38 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் கடந்து செல்கிறது.


எனவே புவி ஈர்ப்பு விசைக்குள் அது வராது. இதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்பட வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.