இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு : ஏற்றுக்கொண்ட அரசாங்கம்!!

1503

அத்தியாவசிய பொருட்கள் ..

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு இல்லை என அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்திருந்த நிலையில், அதனை அமைச்சரவைப் பேச்சாளரான இலங்கையின் வெகுஜன ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெறும நிராகரித்துள்ளார்.

இலங்கையில் நிலவிவரும் அத்தியாவசிய பொருட்களுக்கான நெருக்கடி எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னர் தீர்க்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் பஞ்சம் ஏற்பட்டிருப்பதாக வெளியாகின்ற தகவல்களை அண்மையில் பி.பி.சி செய்திச் சேவைக்கு அளித்த செவ்வியின் போது இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் நிவாட் கப்ரால் நிராகரித்திருந்தார்.

இருந்த போதிலும், கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய டளஸ் அழகப்பெரும, இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 21ஆம் திகதிக்குப் பின்னர் நிலைமை வழமைக்குத் திரும்பிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை இலங்கையில் எரிபொருளுக்கு கடந்த சில தினங்களாக தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில்,

தற்போது எவ்வித தட்டுப்பாடும் இல்லை என்றும் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது என்று இலங்கையின் அமைச்சரவை இணைப்பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-