வில்லங்கமான வீதிப் போக்குவரத்தும் தடுமாறும் இன்றைய தலைமுறையினரும் : ஆய்வுக் கட்டுரை!!

676

Road

போக்குவரத்து என்பது மிக அவசியமான ஒன்று இந்த அவசரமான வாழ்க்கையிலே காலையில் கண் விழித்தது முதல் மாலையில் கண்துயிலும் வரை நாம் பல்வேறுபட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஓடி ஓடித் திரிய வேண்டியுள்ளது.

எம்முடைய வேலைப்பளுக்களுக்கு மத்தியில் நாம் சில விடயங்களை மறந்தே போகின்றோம் . வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டால் பல்வேறு பட்ட மனிதர்களை நாம் வீதியால் செல்லும்போது சந்திக்கவேண்டியுள்ளது . ஒவ்வொருவரும் வித்தியாசமான குணாதிசயங்களைக் கொண்டவர்களாகவே இருகின்றனர்.

2009 ஆண்டு போர் நடவடிக்கைகள் நிறைவு பெற்றதன் பின்னர் நாடு மிகவும் வேகமான முறையில் அபிவிருத்தி பாதையில் முன்னேறி கொண்டு செல்கின்றமை யாவரும் அறிந்ததே. வீதி அபிவிருத்தியே முதன்மை இலக்காக கொண்டு நாடெங்கிலும் வீதிகள் முழுவதும் திருத்தம் பெற்று வருகின்றமையும் நீங்கள் அறிந்ததே.

நாடெங்கிலும் புற்றீசல் போல் காணபடுகின்ற நிதிகம்பனிகள்,லீசிங் கம்பனிகளின் போட்டி வியாபார உத்திகளின் அடிப்படையில் வீட்டுகொரு வாகனம் வேண்டும் என்ற நிலையில் வாகனங்களின் எண்ணிக்கை வடமாகாணத்தில் அதாவது வவுனியா யாழ்பாணம் மன்னர் முல்லைதீவு கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் அதிகரிதுள்ளமை யாவரும் கண்கூடாக காண்கின்றமை யதார்த்தம்.

வாகனங்கள் மக்களுடைய எண்ணிக்கையிலும் பார்க்க அதிகரித்து வீதி எங்கிலும் பேரணி போன்றுதான் பயனிக்கவேண்டியுள்ளது. வீட்டிலிருந்து புறப்பட்டால் மீண்டும் வீடு போய் சேர்வோமா என்கின்ற நிலைமை உண்டு. இந்த சூழ்நிலையில் தான் நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போட்டு கொண்டு வீதிகளில் பயணிக்க வேண்டியிருகிறது.

பயணத்தில் மட்டுமே நாம் குறியாய் இருக்கிறோமே தவிர எவ்வாறு பயணம் செய்கிறோம் என்பதை பற்றி நாம் எள்ளளவும் கவலை கொண்டது கிடையாது. ஏதோ சொந்த வீதிகளில் பயணிப்பது போன்ற எண்ணத்துடனேயே அநேகமான பொதுமக்கள் நடமாடுகின்றனர். சாரதி அனுமதி பத்திரங்களை எதோ ஓர் வகையில் பெற்று கொள்கின்றனர். ஆனால் சாலை விதிமுறைகள் சமிக்கைகள் என்பவை தொடர்பாக விழிப்புணர்வு கொஞ்சமேனும் இல்லாதவர்களாகவே காணப்டுகின்றனர்.

ஒருவாகனத்தை முந்தி செல்லும் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற நடைமுறையைக் கூட கடைபிடிப்பது கிடையாது. இன்று இவ்வளவுதூரம் விபத்துக்கள் இடம் பெறுவது இதன் அடிப்படையிலேதான் என்பது பட்டவர்தனமான நிதர்சனம்.
வாகனங்களை செலுத்தும் இடம்பெறுகின்ற தவறுகள்
வாகனங்களை செலுத்தும் போது மிக மிக அவதானம் தேவை அதயும் குறிப்பாக சமிக்கைகள் வீதி ஒழுங்கு விதிகளை பயன்படுத்துவதை கருத்தில் கொண்டு செயற்படுங்கள். நீங்கள் இவற்றை கருத்தில் கொள்ளாதவிடத்து பாதிப்பு எல்லோருக்கும் தான். குறிப்பாக அதிகளவான விபத்துக்கள் பிரதான வீதியிலிருந்து உப வீதிக்கு செல்லும் இடங்களில் தான் இடம்பெறுகின்றன.

மேற்படி இடங்களில் எவ்வாறு பயனிக்கவேண்டியது தொடர்பாக யாரும் பெரிதாக அக்கறை கொள்வதாக தெரியவில்லை. பிரதான வீதியிலிருந்து உப வீதிக்கு அல்லது உப வீதி ஒன்றிலிருந்து பிரதான வீதி நோக்கி செல்லும் போது பின்வரும் நிலைமைகள் அவதானித்து அறியப்படுள்ளன .

• வேகம் கருத்தில் கொள்ளப்படுவதில்லை (இளைஞர்கள்)

• பக்க கண்ணாடிகள் (mirror) பயன்படுத்துவது கிடையாது (பெண்கள்)

• சமிக்கை விளக்குகள் (signal lights ) பயன்படுத்துவது கிடையாது (இருபாலரும்)

• பெண்கள் சடுதியாக திருப்புகின்றமை (முன் பின் கவனிக்காமல்)

• வளைவான முடுக்குகளில் பயணிக்கும்போது horn அடிப்பது கிடையாது.

• பின்னால் வருகின்ற வாகனங்களை கூர்ந்து கவனிப்பது இல்லை.

• வாகனமொட்டும்போது மொபைல்போன்(mobile) உபயோகித்தல்.

• தலைகவசம் (helmet) ஒழுங்கான முறையில் அணியப்படுவதில்லை.

• பாதசாரிகள் கடவையை கவனிப்பது கிடையாது.

• வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் சாலைகளில் நிறுத்தி வைத்தல்.

• மதுசாரம் அருந்திய நிலையில் வாகனமோட்டல்.

பிரதான வீதியிலிருந்து உப வீதிக்கு அல்லது உப வீதி ஒன்றிலிருந்து பிரதான வீதி நோக்கி செல்லும் போது கீழே தரபட்டுள்ள படத்தில் உள்ளவாறு மிக கவனமாக செயற்படுங்கள்.

Road1

 

மோட்டார் சைக்கிளில் பயணிப்போர் கவனத்திற்கு..

• உங்களது மித மிஞ்சிய வேகத்தை குறையுங்கள்.

• உங்கள் வாகன கண்ணாடிகளை கூர்ந்து கவனியுங்கள் ஏனெனில் எல்லாபக்கமும் அவதானமாக இருக்கவேண்டும் சாலையில் பயணிக்கும்போது பொதுவாக பெண்களை எடுத்துகொண்டால் அவர்களுடைய மோட்டார் சைக்கில் கண்ணாடிகளை உபயோகிப்பது என்பது கிடையாது.

• கட்டாயம் திருப்புவதற்கான சமிக்கை விளக்குகளை ஒளிரச் செய்யுங்கள்.

• எந்த பக்கம் திரும்ப வேண்டும் என்பதனையும் குறிப்பிட்ட இடத்தை அடையும் முன்னே தீர்மானித்து செயல்படுங்கள்.

• பொறுமையாக நிதானமாக வாகனமோட்டுங்கள், அவசரப்படாதீர்கள்.

• உங்களுக்கு பின்னால் லொறி, டிப்பர், பேருந்துகள் முதலியன வரும்போது உங்கள் வேகத்தை குறைத்து வீதியை விட்டு கரைப்பக்கமாக செல்லுங்கள் உங்கள் பாதுகாப்பு உங்கள் கையிலேதான்.

• தலைகவசங்களை உங்கள் தலைகளுக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்கும் வகையில் வாங்கி அணியுங்கள்.

• உங்கள் குழந்தைகளுடன் பயணிக்கும்போது அவர்களையும் தலைகவசம் சரியான முறையில் அணிந்துள்ளமையை உறுதி செய்த பின் பயணத்தை தொடங்குங்கள்.

• பாதசாரிகள் கடவைகளை மிகவும் அவதானமாக கடந்து செல்லுங்கள்.

• வீதிகளில் நீங்கள் பாதசாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்கள் வீதியை கடந்து சென்றபின் நீங்கள் பயணத்தை தொடங்குங்கள்.

• பாடசாலைகள் வைத்தியசாலைகள் நீதிமன்றங்கள் என்பவற்றுக்கு முன் பயணிக்கும் போது உரிய விதிகளை கடைபிடியுங்கள்.

வாகனசாரதிகள் பலர் அறியாத விடயங்கள்..

* வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. அதாவது சாலையில் பயணிக்கும்போது செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை.

* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லதுவாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

* வீதியின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருதவேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்தஅழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.க்கு முன்பே டிம் செய்ய வேண்டும்.

* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு “இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்’ என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் அக்ஸிலேட்டரை மெதுவாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணியும்போது சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

சாலை விதிகளை சரியானப் பேணி அடுத்தவர்களுக்கும் வழிகாட்டிகளாக செயற்படுங்கள். வீதி போக்குவரத்து தொடர்பாக விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

-பண்டிதர்-