வவுனியா காத்தார் சின்னக்குளம் கிராம மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு!!

1589

சுபீட்சத்தின் நோக்கு..

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் வவுனியா, காத்தார் சின்னக்குளம் கிராம மக்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காத்தார் சின்னக்குளம் கிராமத்தில் வாழ்ந்து வரும் மக்கள் தமது காணிக்கான உறுதிப்பத்திரங்களின்றி கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இருவரினதும் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் காணியற்ற மக்களுக்கு காணிக்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கல் திட்டத்தின் அடிப்படையில் குறித்த கிராமத்தில் காணி உறுதிப்பத்திரங்கள் இல்லாத நிலையில் இருந்த 26 குடும்பங்களுக்கு அவை வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன், குறித்த கிராமத்தில் பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் 34 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன், வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், கிராம அலுவலர் எஸ்.தர்சன்,

அபிவிருத்திக் குழுத் தலைவரின் இணைப்பாளர் கே.டினேஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு காணி உறுதிப் பத்திரங்கள் மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.