வவுனியாவை வந்தடைந்தது ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிப்போம் வாகன ஊர்தி!!

1744

வாகன ஊர்தி..

ஒற்றையாட்சிக்கு உட்பட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிப்போம் என்பதை வெளிப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட ஊர்த்திப் பவனி நேற்று (26.01) இரவு வவுனியாவை வந்தடைந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட 6 கட்சிகள் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி இந்தியாவுக்கு கடிதம் அனுப்பியுள்ள நிலையில்,

ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரித்து சமஸ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளால் யாழ்ப்பாணம் நல்லூரடியில் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 9.30 இற்கு மாபெரும் பேரணி ஒன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக தமிழ் மக்களின் நீண்டகால அபிலாசைகளான சமஸ்டி தீர்வை வலியுறுத்தியும், ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிக்க கோரியும் அலகரிக்கப்பட்ட ஊர்திப் பவனி ஒன்று நேற்று (26.01) மாங்குளம் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த பவனி மல்லாவி, விடத்தல் தீவு, மன்னார் ஆகிய பகுதிகளுக்கு சென்று இரவு வவுனியாவை வந்தடைந்தது. வவுனியா நகரில் இருந்து புறப்பட்டு முல்லைத்தீவு நோக்கி சென்று அங்கிருந்து கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணம் செல்லவுள்ளது.