உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கோடீஸ்வர தமிழர் : கடல் கடந்து சென்றும் மனதை பறித்த பெண் : சுவாரஸ்ய காதல் கதை!!

801

சுந்தர் பிச்சை..

உலகளவில் பிரபலமாக இருக்கும் ஒரு தமிழர் தான் சுந்தர் பிச்சை. உலகின் மிகப்பெரிய ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்களில் ஒன்றான கூகுள்-ன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ.

மதுரையில் பெரிய அளவிலான பணம், வசதிகள் இல்லாத குடும்பத்தில் பிறந்து வெறும் கல்வியை மட்டுமே நம்பிய சுந்தர் பிச்சை இன்று உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனத்தின் சிஇஓ-வாக உள்ளார்.

அவரின் சொத்து மதிப்பு $600 மில்லியன் ஆகும். எளிமையான மனிதராக அறியப்படும் சுந்தர் பிச்சைக்கு ஒரு சுவாரசியமான காதல் கதை உள்ளது. சுந்தர் பிச்சையின் காதல் மனைவியின் பெயர் அஞ்சலி.

இந்த தம்பதிக்கு காவியா பிச்சை மற்றும் கிரன் பிச்சை என இரு பிள்ளைகள் உள்ளனர். கல்லூரியில் படிக்கும் போது தான் அஞ்சலியை சுந்தர் பிச்சை முதன் முதலில் பார்த்துள்ளார்.

இருவருக்கும் பார்த்த உடனே காதல் மலரவில்லை, நீண்ட கால நட்பு தான் அழகான காதலாக பின்னாளில் மாறியது. ஐஐடி காரக்பூர் கல்லூரியில் படிப்பை முடித்த சுந்தர் பிச்சை அமெரிக்காவிற்கு மேற்படிப்புப் படிக்கப் பறந்தார். சுந்தர் பிச்சை நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்த காரணத்தால் அமெரிக்காவுக்குச் சென்ற சுந்தர் பிச்சை போனில் கூட அஞ்சலி பிச்சை உடன் பேச முடியாத நிலை இருந்தது.

அமெரிக்காவிற்குச் சென்ற சுந்தர் பிச்சை, அஞ்சலி பிச்சை-யிடம் 6 மாதம் பேச முடியாமல் தவித்தார். இந்த 6 மாதத்தில் இருவருக்கும் மத்தியிலான காதல் அதிகரித்தது, அதன் பின்பு கடல் விட்டு கடல் தாண்டி அமெரிக்காவிற்குப் பறந்து சென்று சுந்தரின் மனதில் மேலும் ஒட்டி கொண்டார் அஞ்சலி பிச்சை.

இது கிட்டத்தட்ட வாரணம் ஆயிரம் திரைப்பட ஸ்டைல் தான்..! சுந்தர் பிச்சை அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்த உடனே வேலையைப் பெற்ற கையோடு அஞ்சலி பிச்சையை திருமணம் செய்ய முடிவு செய்தார்.

உடனே இருவரும் தங்கள் வீட்டில் பேசி கல்லூரி படிப்பை முடித்த சில வருடங்களிலேயே திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது இலங்கையில் நடப்பது என்ன| கப்பல் மற்றும் விமான தளங்களுக்கு அதிஉயர் பாதுகாப்புடன் சென்றது யார்