GOOGLE MAP ஆல் நடந்த பரிதாபம் : ஓடைக்குள் இறங்கிய கார் : அலறியடித்த குடும்பம்!!

1396


ஆற்று ஓடையில்..



Google Map செயலியைப் பயன்படுத்தி கார் ஓட்டிச் சென்றவர் ஆற்று ஓடையில் சிக்கிய சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. நாம் ஒரு இடத்திற்குச் செல்லும்போது வழி தெரியவில்லை என்றால் சாலையில் இருப்பவர்களிடம் கேட்டுக் கேட்டு செல்வோம். ஆனால் இப்போது நாம் Google Map உதவியை நாடுகிறோம்.



இப்படி Google Map-ஐ பயன்படுத்திப் பயணிக்கும்போது சில நேரங்களில் தவறான வழியைக் காட்டி, செல்ல வேண்டிய இடத்திற்குப் பதில் வேறு இடத்திற்குச் சென்ற சம்பவம் நம்மில் சிலருக்கு நடத்திருக்கும். அப்படி Google Map பயன்படுத்தி கார் ஓட்டிச் சென்ற ஒருவருக்கு மோசமான ஒரு சம்பவம் சம்பவம் நடந்துள்ளது.




கேரள மாநிலம் திருவல்லா கும்பநாடு பகுதியைச் சேர்ந்தவர் சோனியா. இவரது தாயார் சோஷாம்மா, உறவினர் அனீஷ் மற்றும் 3 மாத கைக்குழந்தை ஆகிய அனைவரும் எர்ணாகுளத்தில் இருந்து திருவல்லா நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.


இவர்களுக்கு சரியான வழி தெரியாததால் Google Mapஐ பயன்படுத்திச் சென்றனர். அண்மையில் பெய்த மழையால் அவர் சென்ற பாதை முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அவர்களுக்கு சாலை முழுமையாகத் தெரிவில்லை.

மேலும் google map-யை நம்பி அவர்கள் அதேபாதையில் காரில்சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் காரில் இருந்த அனைவரும் அலறியுள்ளனர். அப்போதுதான் அவர்களுக்கு சாலையோரம் இருந்த ஆற்று ஓடையில் கார் இறங்கியது தெரிந்தது.


பின்னர் இவர்கள் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் உடனே காரில் இருந்தவர்களைப் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இது குறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலிஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஓடையில் இருந்து காரை வெளியே எடுத்தனர்.

இதேபோன்று கடந்த மே மாதம் கர்நாடகாவிலிருந்து சுற்றுலா வந்த குடும்பம் google map-யை பயன்படுத்தி சாரில் பயணம் செய்தபோது குருப்ந்தரா பகுதியில் ஓடைக்குள் கார் இறங்கிய சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி google map-யை பயன்படுத்தி செல்வர்கள் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது