கட்டாக்காலியாக திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை – வவுனியா நகரசபை உப தலைவர்..!

397

cow

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலியாக திரியும் மாடுகளை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை இன்று முதல் மேற்கொள்ளப்படும் என வவுனியா நகரசபையின் பதில் தலைவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக் காலமாக வவுனியாவில் திரியும் கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்களால் ஏற்பட்ட வாகன விபத்துக்களால் பலர் காயமடைத்ததோடு பல பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பல சௌகரியங்களை எதிர் கொண்டனர்.

இதற்கமைவாக நேற்றைய தினம் மாவட்ட சிரே~;ட பொலிஸ் அத்தியட்சகருக்கும் நகரசபைக்கும் இடையில் இடம்பெற்ற அவசர சந்திப்பை அடுத்தே இந் நடவடிக்கை உடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் தொழில்சார் உத்தியோகத்தர்களின் பல முறைப்பாட்டு கடிதங்கள் மற்றும் கோரிக்கைகள் எமக்கும் பொலிசாருக்கும் கிடைத்துள்ளன. இதற்கமைவாக வீதிகளிலும் பொது இடங்களிலும் காணப்படும் மாடுகளை பிடிப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ் நடவடிக்கைக்கு நகரசபையின் சுகாதார பிரிவின் விசேட ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந் நடவடிக்கைக்கு பொறுப்பாக எமது நகரசபையின் சிரேஸ்ட உறுப்பினரும் சுகாதார குழுத்தலைவருமான சு.குமாரசாமி நியமிக்கப்படடுள்ளார்.

இதன் பிரகாரம் மாடுகள் பிடிக்கப்பட்டு நகரசபையில் விசேடமாக அமைக்கப்பட்ட இடத்தில் வைத்து பராமரிக்கப்படும். மாடுகளை உரியவர் பெற வேண்டுமாயின் ஒரு நாள் கட்டணம் ரூபா 750இ பிடி கூலியாக ரூபா 400இ பராமரிப்பு ரூபா 250 செலுத்தவேண்டும்.

கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டு 72 மணித்தியாலங்களுக்குள் பெற தவறும் பட்சத்தில் அம்மாடுகள் பகிரங்க ஏலத்தில் விற்கப்படும்.

வைரவபுளியங்குளம் யு9 வீதிஇ வேப்பங்குளம்இ ப+ந்தோட்டம் போன்ற பகுதியில் தான் கூடுதலான கட்டாக்காலி மாடுகள் காணப்படுகின்றன. இவற்றினைக்கட்டுப்படுத்த பொது மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அதே போல் வவுனியா நகரில் கட்டாக்காலி நாய்களையும் கட்டுப்படுத்த பம்பைமடு பிரதேசத்தில் விசேட பண்ணை அமைக்கப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.