42 வருடத்திற்கு முன் காணாமல் போன பெண்.. இத்தனை நாளா தேடிக்கொண்டு இருந்த குடும்பத்தித்திற்கு காத்திருந்த அதிர்ச்சி!!

1262

கனடாவில்..

கனடா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர், கடந்த 42 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன நிலையில், தற்போது அவர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. இவர் கடந்த 1980 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் திடீரென மாயமாகியுள்ளார். அப்போது 22 வயதாக இருந்த நான்சி, தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வந்த நிலையில், திடீரென வீட்டில் இருந்து சூட்கேஸுடன் கிளம்பியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக நான்சியின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசாரும் காணாமல் போன நான்சியை தேடி வந்துள்ளனர். அப்படி ஒரு சூழ்நிலையில், கடைசியாக நான்சி சென்ற டாக்ஸி டிரைவர் குறித்து போலீசருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தொடர்ந்து அந்த டாக்ஸியின் ஓட்டுநரை கண்டுபிடித்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நான்சி எங்கே சென்றார் என்பது தனக்கு தெரியாது என்றும், அவரை நான் பஸ் ஸ்டாண்ட்டில் இறக்கி விட்ட போது, இரண்டு பேருடன் அவர் பேசிக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அந்த இரண்டு பேரும் யார் என்பதை அடையாளம் காண முடியாமலே போயுள்ளது. அப்படி ஒரு சூழ்நிலையில், நான்சி காணாமல் போய் 40 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த ஆண்டு ஒன்றாரியோ மாகாண காவல்துறையினர், நான்சியின் தற்போதைய வயதை ஏற்றபடி, ஓவியம் ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.

அதே போல, நான்சியின் சகோதரி ஒருவர், தற்போது வரை அவரது குடும்பத்தினர் அவரைத் தேடி வருவதை நிறுத்தவில்லை என்றும், நான்சியை அதிகம் மிஸ் செய்வதாகவும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும், சகோதரி நான்சி பற்றி ஏதாவது தகவல் கிடைக்கும் என்றும் அவரின் குடும்பத்தினர் காத்திருந்துள்ளனர்.

இந்த நிலையில், சுமார் 42 ஆண்டுகளுக்குப் பிறகு நான்சி குறித்த செய்தி ஒன்று அவரது குடும்பத்தினரை தேடி வந்துள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, நான்சி வேறொரு நாட்டில் வாழ்ந்து வந்ததாகவும், மூன்றாவது நபர் ஒருவர் தெரிவித்துள்ளதாக போலீசார் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த தகவலையும் போலீசார் உறுதி செய்துள்ளனர். சுமார் 42 ஆண்டுகளுக்கு பிறகு நான்சி வேறு நாட்டில் இருந்தது பற்றிய தகவல் தெரிய வந்தாலும் நான்சி சமீபத்தில் உயிரிழந்துவிட்டதாகவும் அந்த மூன்றாவது நபர் தெரிவித்துள்ளார்.

நான்சி வெளிநாட்டில் இருப்பதாக தகவல் தெரிய வந்தது பற்றி அறிந்த குடும்பத்தினர், மகிழ்ச்சி அடைவதற்கு முன்பே, அவர் சமீபத்தில் இறந்த செய்தி, அவரது குடும்பத்தினரை கடும் ஏமாற்றத்திலும், வேதனையிலும் ஆழ்த்தி உள்ளது.