இலங்கையில் மாற்றமடையும் அடையாள அட்டை!!

773

அடையாள அட்டை..

இலங்கையர்களின் அடையாள அட்டை புதிய மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கமைய, பயோமெட்ரிக் தரவுகளை இணைத்து டிஜிட்டல் அடையாள அட்டை கட்டமைப்பை தயாரிக்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென,

ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“தற்போது, ​​தேசிய அடையாள அட்டையைப் பெற பொதுவான தரவுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பயோமெட்ரிக் தரவுகளை இனிமேல் அடையாள அட்டைகளில் சேர்க்கப்பட வேண்டும்.

உதாரணமாக, நமது கைரேகைகள், இரத்தம் தொடர்பான விபரங்கள், கண் தரவுகள் ஆகியவற்றையே பயோமெட்ரிக் தரவு என்கிறோம். எதிர்காலத்தில், இந்த பயோமெட்ரிக் தரவை சேர்த்து தேசிய அடையாள அட்டையை வழங்கத் தொடங்குவோம்.

தற்போது, ​​இது இந்திய உதவியின் கீழ் உள்ளது, இப்போது அனைத்து விடயங்களும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய நாங்கள் அனைவரும் மீள் பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.