வெறும் 24 மணி நேரத்தில் இளைஞர் செய்த மிகப்பெரிய சாதனை!!

1274

கனடாவில்..

கனடாவை சேர்ந்த இளைஞர் தனது 23 வயதிலேயே 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார்.

உலகில் அதிகரித்து வரும் காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் ஆகியவற்றிக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மரங்களை பாதுகாத்தல் மற்றும் புதிய மரக்கன்றுகளை நடுதல் போன்ற விழிப்புணர்வை உலக அமைப்புகள் தற்போது வழியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கனடாவின் கியூபெக்கைச் சேர்ந்த அண்டோயின் மோசஸ் தனது 17 வயதில் மரக்கன்றுகளை பொழுதுபோக்காக விதைக்க தொடங்கி தற்போது லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை 18-ம் திகதி வெறும் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 23 ஆயிரத்து 60 மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளார். அண்டோயின் மோசஸ்(Antoine Moses) தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகளை நட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.