“யாரும் அந்த கடற்கரைக்கு போகாதீங்க”… மணலுக்கு அடியில் காத்துக் கிடக்கும் ஆபத்து? அச்சத்தில் மக்கள்!!

576

இங்கிலாந்தில்..

அவ்வப்போது உலகிலுள்ள ஏதாவது மக்களுக்கு பொதுவான இடங்கள், பல காரணங்களுக்காக தடை செய்யப்படுவதை நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில், இங்கிலாந்திலுள்ள Chichester என்னும் பகுதியில் அமைந்துள்ள Medmerry என்னும் கடற்கரைக்கு செல்ல மக்கள் தடை செய்யப்பட்டுள்ள சம்பவமும், அதன் பின்னால் உள்ள காரணமும் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Medmerry கடற்கரையை மக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணம், அந்த கடற்கரையில் நிலவும் ஆபத்துக்கள் தான்.

அந்த கடற்கரையின் உள்ள மணலின் அடியில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, பீரங்கிகளுடன் வெடி பொருட்கள் உள்ளே ஆழமாக புதைக்கப்பட்டிருந்த நிலையில் அவை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

அது மட்டுமில்லாமல், வெடிகுண்டுகள் போல இன்னும் நிறைய மறைக்கப்பட்ட ஆபத்துக்கள், அந்த கடற்கரையில் நிரம்பி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இது போக, அலை சீற்றம், சீரற்ற நிலம் என பல ஆபத்துக்கள் அந்த கடற்கரையில் இருப்பதால், மக்கள் அங்கே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை பலகை ஒன்றும் அந்த கடற்கரையில் வைக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் அந்த கடற்கரையின் அருகே உள்ள மக்கள், இதன் ஆபத்தை உணர்ந்து அங்கே செல்லாமல் தான் இருக்கின்றனர். ஆனாலும், தற்போது ஐரோப்ப நாடுகளில், வெப்ப நிலை வரலாறு காணாத அளவுக்கு வாடி எடுப்பதால், மக்கள் பலரும் Medmerry கடற்கரைக்கு செல்வதை தான் பழக்கமாக கொண்டுள்ளனர்.

இது பற்றி அறிந்த கடற்படை மீட்புக் குழு, அங்குள்ள ஆபத்து குறித்து மீண்டும் மக்களை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருள் வெடிக்கும் வகையில் அமைந்திருந்தது என்றும், இதனால் அப்பகுதியில் செல்பவர்கள் மர்மமான பொருட்களை பார்த்தால், அதனை தொடாமல் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இது போக, கடந்த இரண்டு ஆண்டுகளில் வெடிக்கும் தன்மையுள்ள பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் அவ்வப்போது கண்டெடுக்கப்பட்டு வருவது, அப்பகுதி மக்களை கடும் அச்சத்திற்கு ஆளாக்கியுள்ளது. அதே வேளையில், இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதும் தொடர்ந்து ஒரு புதிராகவே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.