இறுதிச் சடங்கில் உயிரோடு எழுந்து வந்த சிறுமி.. உறவினர்களுக்கு இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!!

797

மெக்சிகோவில்..

மெக்சிகோவில் உள்ள சான் லூயிஸ் போடோசி மாகாணத்தில் உள்ள சலினாஸ் டி ஹில்டால்கோ என்ற மருத்துவமனையில் தான், இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது. 3 வயது சிறுமி காமிலா ரோக்சானா மார்டினேஸ்.

இந்த சிறுமி கடந்த சில நாள்களுக்கு முன்னர் வயிற்று கோளாறு காரணமாக அவதிப்பட்டுள்ளார். வயிற்று வலி மற்றும் காய்ச்சலுடன் தொடர் வாந்தி அவருக்கு ஏற்பட்டுள்ளது.

தனது சொந்த ஊரில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி சேர்க்கப்பட்டார். அவருக்கு டிஹைட்ரேஷன் ஏற்பட்டதாகக் கூறி மருத்துவர்கள் மாத்திரைகள் தந்துள்ளனர். பிறகு வீட்டிற்கு கூட்டி செல்லப்பட்டார் அந்த சிறுமி.

பிறகு மீண்டும் சிறுமியின் உடல்நிலை மோசமாக, அதே மருத்துவமனைக்கு பெற்றோர்கள் குழந்தையை தூக்கி கொண்டு சென்றுள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்களோ, சிறுமி இறந்துவிட்டால் என்று கூறியுள்ளனர்.

பிறகு சிறுமி காமிலாவின் இறுதி சடங்கு அடுத்த நாள், அவரது குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது தான் அந்த அதிர்ச்சிகர சம்பவம் நடைபெற்றது.

சடங்கு நடத்திய போது, குழந்தையின் கண்களில் அசைகள் தென்பட்டது. இதனை அவரது பாட்டி கண்டுபிடித்தார். பிறகு உடனே சவப்பெட்டியை திறந்து பரிசோதித்து பார்த்ததில் காமிலாவுக்கு நாடித்துடிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பிறகு குழந்தையை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டது என்று கூறினார். குழந்தை ஒன்று இரண்டாவது முறையாக இறந்த சம்பவம் விநோதத்தை மட்டுமல்லாமல், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதுதொடர்பாக ஒருபக்கம் வழக்கு விசாரணையும், மற்றொரு பக்கம் பிரேத பரிசோதனையும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.