இலங்கையில் 300 ரூபாவாக அதிகரிக்கும் பாணின் விலை!!

653

பாணின் விலை..

எதிர்வரும் நாட்களில் பாண் ஒரு இறாத்தலின் விலையை 300 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், டொலர் நெருக்கடி காரணமாக கோதுமை மா இறக்குமதியை நிறுவனங்கள் கட்டுப்படுத்தியிருந்தன. இதன் காரணமாக 50 கிலோகிராம் எடை கொண்ட கோதுமை மா மூட்டை ஒன்றின் விலை தற்போது இருபதாயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை கோதுமை மாவின் தட்டுப்பாடு காரணமாக பல பேக்கரிகள் மூடப்படும் அபாயம் உள்ளது. எனவே எதிர்வரும் நாட்களில் பாண் ஒரு இறாத்தலின் விலையை 300 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் என்பதுடன், பணிஸ் ஒன்றின் விலையை 30 ரூபா அளவிலும் அதிகரிக்க வேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-