வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் இடம்பெற்ற சிறுவர் முதியோர் மற்றும் ஆசிரியர் தின நிகழ்வு!!

1199

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத
அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அனுசரணையின் கீழ் இயங்கும்
அருளகம் சிறுவர் இல்லம்  மற்றும் சிவன் முதியோர் இல்லத்தின்
சர்வதேச சிறுவர் முதியோர்  மற்றும் ஆசிரியர்தின நிகழ்வுகள்
கடந்த12.10.2022(புதன்கிழமை) எல்லப்பர்மருதங்குளத்தில்
அமைந்துள்ள  சிவன் முதியோர் இல்ல மண்டபத்தில்
திரு.ஆ.நவரத்தினராசா  (செயலாளர்,அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி
சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில்)தலைமையில் இடம் பெற்றது.மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.பி.ஏ.சரத்சந்திர(அரசாங்க அதிபர், மாவட்ட செயலகம், வவுனியா
மற்றும்  திரு.தி.திரேஸ்குமார் மேலதிக அரசாங்க அதிபர்.மாவட்ட
செயலகம், வவுனியா)திரு.சந்தன அழககோன் (வன்னி பிராந்திய பீரதி
பொலிஸ்மா அதிபர்) திரு.நா.கமலதாசன்   (பிரதேச செயலாளர்,
வவுனியா) ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் திரு. Dr.
சு.செந்துாரன் (சிரேஷ்ட வைத்திய அதிகாரி வவுனியா மாவட்ட பொது
வைத்தியசாலை), திரு.க.தயாபரன் (சிரேஷ்ட சட்டத்தரணி,வவுனியா)
திரு.சி.கிஷோர் திடீர் மரண விசாரனை அதிகாரி)
திரு.T.தியாகலிங்கம் (சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர்-வவுனியா) ஆகியோர்  சிறப்பு விருந்தினர்களாகவும்  திரு.தி.காருணியநாதன்
சிரேஷ்ட நன்னடத்தை உத்தியோகத்தர்),திரு.நா.இராஜமனோகரன் மாவட்டசமூகசேவை உத்தியோகத்தர்)திரு.ஜெ.கெனடி (சிறுவர் உரிமை
மேம்பாட்டு உத்தியோகத்தர், மாவட்டச்செயலகம்),திரு.செ.நந்தசீலன் மாவட்ட உளசமூகஉத்தியோகத்தர்),திரு.இ.கோகுலதாஸ் (நன்னடத்தை
உத்தியோகத்தர்),திருமதி. பா.தனுசியா  (முதியோர் மேம்பாட்டு
உத்தியோகத்தர், மாவட்ட செயலகம்),திரு.க.இராஜசேகர் (சமூகசேவை
உத்தியோகக்தர் மாவட்டசெயலகம்) ஆகியோர் விசேட
விருந்தினர்களாகவும் கலந்து கொண்டிருந்தனர்.

மேற்படி நிகழ்வின் போது சிறுவர் முதியோர்  மற்றும் ஆசிரியர்கள்
தினத்தை முன்னிட்டு நடாத்தபட்டு போட்டிகளில்
வெற்றியீட்டியவர்களுக்கான  பரிசளிப்பு நிகழ்வு மற்றும் அருளக
சிறுவர் இல்லத்திலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான
மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு மற்றும் ஆசிரியர்களுக்கான
கௌரவிப்பு நிகழ்வும்  என்பவற்றுடன் இல்லங்களின் மேலாளர்கள்
பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றமை
குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்வின் போது இலங்கை வங்கி வவுனியா கிளையினரால் சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கான அன்பளிப்பு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.