வவுனியாவில் இளையதம்பி தருமபாலன் தொகுத்த மூன்று நூல்கள் வெளியீட்டு விழா!!

794

நூல் வெளியீட்டு விழா..

வவுனியாத் தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் இளையதம்பி தருமபாலன் தொகுத்த மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வு வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இன்று (13.11.2022) காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.

தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் இடம்பெற்ற நூல் வெளியிட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.பி.நடராசா கலந்து கொண்டிருந்தமையுடன்,

முதல் நிகழ்வாக மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியதுடன் வரவேற்புரையினை திருமதி சி.குமாரதேவியும் வாழ்த்துரையினை சிவஸ்ரீ ஜெ.மயூரக் குருக்களும் நூல்களின் அறிமுகத்தை கலாசார உத்தியோகத்தர் சிவ.கஜேந்திரகுமாரும் நிகழ்த்தியிருந்தனர்.

அத்துடன் வேப்பங்குளம் ஞானவைரவர் ஆலய அறங்காவலர் பொ.நாகேந்திரம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் நூல்களின் முதற்பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

நூல்களின் நயவுரைகளில் ‘சைவசமய ஆலய வழிபாட்டு அமுதம்’ நூலை -எஸ்.எஸ்.வாசன் மற்றும் ‘நாயன்மார்களின் வரலாறும் வழிபாடும்’நூலை -கி.உதயகுமார் மற்றும் ‘திருவாசகம் நூலை ‘-திருமதி. அனுஷா மதியழகன் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.

நூல்களின் நன்றியுரையை வைத்தியகலாநிதி திருமதி.விமலா விஷ்வநாதன் நிகழ்த்தியிருந்தார். நிகழ்வில் கலைஞர்கள், எழுத்தாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.