நட்சத்திர கால்பந்து வீரர் அதிரடியாக கைது… உலகக் கோப்பை அணியிலிருந்து நீக்கப்பட்ட காரணம் அம்பலம்!!

262

வோரியா கஃபூரி..

ஈரானின் நட்சத்திர கால்பந்து வீரர், பயிற்சியின் போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளை பரப்பியதால் கத்தார் உலகக் கோப்பைக்கான தேசிய அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஈரானின் பிரபல கால்பந்து நட்சத்திரம் 35 வயதான வோரியா கஃபூரி. இவரையே உலகக் கோப்பைக்கான தேசிய அணியில் இருந்து நீக்கியதுடன், உள்ளூர் கிளப் ஒன்றில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தேசிய அணியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளதுடன், அரசுக்கு எதிராக பிரசாரம் செய்தார் எனவும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஈரான் அரசாங்கத்தால் கலவரக்காரர்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்ததால், கத்தார் உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஈரானின் குர்து சிறுபான்மை மக்களில் கஃபூரியும் ஒருவர், அதனாலையே அரசாங்கத்திற்கு எதிராகவும் தமது இன மக்களுக்கு ஆதரவாகவும் அவர் குரல் கொடுத்திருந்தார். 2018ல் கால்பந்து உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த கஃபூரி, இந்த முறை தேசிய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான கத்தார் உலகக் கோப்பை போட்டியில் ஈரானிய அணி தேசிய கீதம் பாட மறுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

வெள்ளிக்கிழமை வேல்ஸ் அணியுடனான போட்டியில் ஈரான் அணி மீண்டும் தேசிய கீதத்தை பாட மறுத்தால், கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ஈரனிய நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில்,

தற்போது நட்சத்திர வீரர் கஃபூரி கைதாகியுள்ளார். தேசிய கீதத்தை பாட மறுப்பதும் நாட்டை அவமதிப்பதும் ஒன்று என ஈரான் அரசியல் தலைவர்கல் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.