அவனை தவிர வேறு யாரும் இல்லை.. சிட்னியில் உயிரிழந்த 17 வயதான இலங்கை சிறுவன்.. மனம் உடைந்த சகோதரி!!

1504

சிட்னியில்..

அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த 17 வயதான மாணவர் விபத்தில் உயிரிழந்தது அவர் குடும்பத்தாரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொழும்பில் பிறந்த 17 வயதுடைய கல்வின் விஜிவீர என்ற மாணவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்தானது கடந்த வியாழன் அன்று உள்ளூர் நேரப்படி பகல் 11.20 மணிக்கு நடந்துள்ளது. அப்போது கல்வின் தனது இரு நண்பர்களுடன் பள்ளியில் இருந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் 90 வயதான மூதாட்டி ஓட்டி வந்த கார் மூவர் மீதும் மோதியது, அதில் கல்வின் வேனின் மீது தூக்கி வீசப்பட்ட நிலையில் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மற்றொரு மாணவருக்கும் தலையில் அடிப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மூன்றாவது மாணவர் காயமின்றி தப்பினார். கல்வின் குடும்பத்தார் கடந்த 2008ல் கொழும்பில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தனர்.

கல்வின் விபத்தில் சிக்கிய போது அவரின் சகோதரி ஒவிண்டி சிங்கப்பூரில் இருந்துள்ளார். தகவல் கேட்டு பதறிய அவர் அவுஸ்திரேலியாவுக்கு பறந்து வந்த போது கல்வினை சடலமாக பார்த்து துடித்து போயுள்ளார்.

ஒவிண்டி கூறுகையில், நான் சிங்கப்பூரில் இருந்து சிட்னியில் உள்ள வெஸ்ட் மீட் மருத்துவமனைக்கு போன் செய்து என் சகோதரர் உடல் நிலை குறித்து கேட்ட போது கல்வின் விஜிவீர என்ற பெயரில் யாரும் இங்கு என கூறினார்கள், இதை கேட்டு குழப்பமடைந்தேன்.

இது குறித்து என் பெற்றோரிடன் கேட்ட போது, இதை நான் உன்னிடம் சொல்ல யாரும் விரும்பவில்லை, ஆனால் அவன் இறந்துவிட்டான் என கூறினார்கள்.

அவனை தவிர எனக்கு வேறு உடன்பிறப்புகள் இல்லை, நான் கல்வினை மிகவும் மிஸ் செய்கிறேன், ஏனெனில் இனி அவனுடன் எதையும் பகிர்ந்து கொள்ள முடியாது. அவன் எப்போதும் எங்கள் நினைவில் இருப்பான் என கூறியுள்ளார்.