2023ம் ஆண்டில் இருளில் மூழ்கும் உலகம் : பல மில்லியன் மக்கள் மரணிப்பார்கள் : பாபா வங்காவின் அதிர்ச்சிக் கணிப்பு!!

2703

பல்கேரியாவில்..

பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா கூறியுள்ள தீர்க்க தரிசனங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறிவரும் நிலையில், வரும் 2023ம் ஆண்டில் என்ன நிகழ்வுகள் நடக்க உள்ளது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கல்கேரியாவில் 1911ம் ஆண்டு பிறந்தவர் பாபா வங்கா. இவரது உண்மையான பெயர் வாங்கெலியா பாண்டேவா கஷ்டெரோவா… இவர் தனது 12 வயதில் கடுமையான புயலில் சிக்கி கண்களை இழந்தார்.

கண்களை இழந்த பின்பு இவர் தான் தீர்க்க தரிசனம் பெற்றதாக கூறியது மட்டுமின்றி, 1996ம் ஆண்டு இறப்பதற்கு முன்பு பல தீர்க்க தரிசனங்களைக் கூறி சென்றார்.

இவர் 5079ம் ஆண்டு வரை தனது கணிப்பினை கூறிச் சென்றுள்ள நிலையில், தற்போது ஒவ்வொன்றாக நிறைவேறி வருகின்றது மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

இவர் தனது கணிப்பில் 2022ம் ஆண்டில் சைபீரியாவில் இருந்து ஒரு புதிய வைரஸ் அறிமுகமாகும் என்று தெரிவித்துள்ளார். பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் போன்றவற்றின் விளைவுகளால், 48,000 ஆண்டுகளுக்கு முன் பனியில் சிக்கிய குறித்த வைரஸ் சைபீரியா பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டது.

குறித்த பகுதியில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்தால், பனிமூட்டத்தில் சிக்கியுள்ள பல வகையான வைரஸ்கள் மீண்டும் உயிர்ப்பித்து உலகை அழிவுக்கு கொண்டு செல்லும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே 2022ம் ஆண்டு ஆஸ்திரேலியா கடுமையான வெள்ளத்தில் பாதிக்கும் என்றும், உலகின் முக்கிய நகரங்களில் குடிநீர் இல்லாமல் தவிக்கும் நிலை இருக்கும் என்று கூறிய இவர் கூறிய கணிப்பு பலித்துள்ளது.

2023ம் ஆண்டில் பாரிய தாக்கம் ஏற்படும். சூரிய புயல் அல்லது சூரிய சுனாமி ஏற்படுவதுடன் பெரிய நாடு உயிரியல் ஆயுதங்களைக் கொண்டு மக்களைத் தாக்கும் என்று கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் 2023ம் ஆண்டில் இருளில் மூழ்குவதோடு, வேற்று கிரகவாசிகள் பூமியைத் தாக்க வாய்ப்புள்ளதாகவும், பல மில்லியன் மக்கள் இறக்க நேரிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2023ம் ஆண்டில் ஆய்வகத்தில் குழந்தைகளை உருவாக்குவதுடன், மனிதர்களின் விருப்பப்படி தோற்றம் நிறத்தினையும் மாற்ற முடியும் என்றும், அணுமின் நிலையத்தில் வெடிப்பு ஏற்பட்டு அதன் நச்சு ஆசிய கண்டத்தை மூடும், இதன் விளைவாக கொடிய நோய் பாதிக்கும் என்று கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.