மோட்டார் சைக்கிலால் வந்த வினை… செல்ஃபி வீடியோ வெளியிட்டு இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!

278

தமிழகத்தில்..

தமிழகத்தில் மிக சமீபமாக தற்கொலைச் செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. ஆசிரியர் திட்டியதாலோ, செல்போன் தராததாலோ, வண்டி வாங்கி தர மறுத்ததாலோ என காரணங்களற்ற மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொள்கின்றனர். எல்லா பிரச்சனைகளுக்கும் தற்கொலை தீர்வாகாது.

உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் உங்கள் பிரச்சனைகள் குறித்து மனம் விட்டு பேசுங்கள். தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பூமால் ராவுத்தர் கோவில் பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ்.

தட்டு வண்டி இழுக்கும் கூலி தொழிலாளியான இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மகன் நந்தகுமார் (22), 8ம் வகுப்பு வரை மட்டும் படித்து முடித்து விட்டு அலுமினிய தொழிற்சாலை பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் அண்மையில் இவர் கேடிஎம் பைக் வேண்டும் என பெற்றோரிடம் கேட்டுள்ளார். மேலும் அதற்கான ‘கோடேசன்’ வாங்கியுள்ளார். ஆனால் பைக்கின் விலை 1.5 லட்சத்துக்கு மேல் உள்ளதால், அன்றாட கூலி வேலை செய்யும் தந்தையால் இவ்வளவு விலை கொடுத்து வாங்கி தர முடியாததால், பைக் வாங்கி தருகிறேன் என காலதாமதம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் பெற்றோர் பைக் வாங்கித்தர தாமதமானதால், விரக்தி அடைந்த நந்தகுமார் கடந்த 27-ம் தேதி கல்லணை கால்வாய் நடைபாதையில் எலி பேஸ்ட்டை மில்க் ஷேக்கில் கலந்து குடித்துள்ளார். மேலும் அதனை செல்ஃபியாக வீடியோவிலும் பதிவு செய்து தனது நண்பர்களுக்கு பகிர்ந்து உள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நந்தகுமாரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த நந்தகுமார் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக தஞ்சை கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏழை பெற்றோர்களால் பைக் வாங்கி தாராத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.